பின்னர் அவர் என்னைத் திருக்கோயிலுக்குள் கூட்டிச்சென்று கோயில் கூடத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவை பக்கத்திற்கு ஆறு முழம் இருந்தன; அதுவே கூடாரத்தின் அளவாகும்.
வாயில் நடையின் அகலம் பத்து முழம்; அதன் பக்கங்கள் இந்தப் புறத்தில் ஐந்து முழமும், அந்தப் புறத்தில் ஐந்து முழமும் இருந்தன; அதன் நீளத்தை அளந்தார்; நாற்பது முழம் இருந்தது; அதன் அகலத்தை அளந்தார்; இருபது முழம் இருந்தது.
இந்தச் சுற்றுக் கட்டுகள் மூன்றடுக்கு மெத்தையாக முப்பது அறைகளைக் கொண்டிருந்தன; இந்த அறைகள் கோயில் சுவரின் மேல் ஊன்றியிராமல், இரு புறத்திலுமுள்ள சுற்றுக்கட்டுகளில் அமைந்திருந்த வரம்புகளின் மேல் ஊன்றியிருந்தன;
ஒரு மெத்தையிலிருந்து இன்னொரு மெத்தைக்குச் செல்ல அகலமான ஒரு சுற்று வழியுமிருந்தது; அதில் படிக்கட்டொன்று சுற்றிப் போய் மிக உச்சியிலுள்ள அறைக்குச் செல்லும்; ஆகவே மேலே போகப் போக கோயில் குறுகியில்லாமல் அகன்றிருக்கும்; அவ்வாறே கீழ்நிலையிலிருந்து மேல்நிலையின் மைய இடத்திற்கு ஏறிப்போகக் கூடுமாயிருக்கும்.
பின்னும் அவர் பின்புறத்தில் தனியாய் இருந்த கட்டடத்திற்கு எதிரேயுள்ள வீட்டின் நீளத்தையும் அளந்தார்; அது இரு பக்கத்திலுமிருந்த தாழ்வாரங்கள், உள்கோயில், பிராகாரத்தின் மண்டபம் எல்லாம் உட்பட நூறு முழமிருந்தது.
மீண்டும் அவர் வாயிற்படிகளையும், வளைந்த பலகணிகளையும், மூன்று பக்கத்திலுமிருந்த நடைப் பந்தல்களையும் அளந்தார்; ஒவ்வொன்றின் வாயிற்படிக்கு எதிரே நடைப்பந்தலைச் சுற்றிலும் மரப்பலகைகள் பொருத்தியிருந்தன; இவை தரையிலிருந்து பலகணிகள் வரை எட்டும்; பலகணிகளோ மூடியிருந்தன.
அவற்றின் முகப்பில் கெருபீம்களும், பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஒரு கெருபீமுக்கும் மற்றொரு கெருபீமுக்கும் நடுவில் ஒரு பேரீச்ச மரம் இருந்தது; ஒவ்வொரு கெருபீமுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
இப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் மனித முகமாயும், அப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் சிங்க முகமாயும் இருந்தன; கோயிலைச் சுற்றிலும் அவ்வாறே இருந்தது.
மரத்தினால் அமைக்கப்பட்ட பலி பீடத்தின் உயரம் மூன்று முழம்; நீளம் இரண்டு முழம்; அகலம் இரண்டு முழம்; அதன் கோணங்களும் விளிம்புகளும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவர் என்னை நோக்கி: "இது ஆண்டவரின் திருமுன் இருக்கிற பீடம்" என்றார்.
இவ்விரண்டு வாயில்களிலும் இருபுறத்துக் கதவுகளும் ஒன்றின் மேலொன்று மடங்கும் இரட்டைக் கதவுகளாய் இருந்தன; வாயிலின் இந்தப் புறத்துக்கும் அந்தப் புறத்துக்கும் இரட்டையான கதவுகள் தான் இருந்தன.
கோயிற்சுவரின் சித்திரிக்கப்பட்டிருந்தவாறே, கோயிலின் வாயிற் கதவுகளிலும் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஆதலால் வெளி மண்டபத்தின் கதவுமரங்கள் அதிகக் கனமானவை.
அவற்றின்மேல் வளைந்த பலகணிகள் காணப்பட்டன; மண்டபத்தின் பக்கங்களில் இரு பக்கமும் மாளிகையின் நெடுஞ்சுவர்களின் அகலத்தில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.