Indian Language Bible Word Collections
Ezekiel 27:16
Ezekiel Chapters
Ezekiel 27 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Ezekiel Chapters
Ezekiel 27 Verses
1
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2
மனிதா, இப்போது நீ தீர் நகரின் மேல் புலம்பு;
3
கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு, பல்வேறு கடற்கரை நாட்டு மக்களுடன் வாணிகம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "தீர் நகரே, 'நான் பேரழகி' என்று உன்னைப் பற்றிப் போற்றிக் கொள்ளுகிறாய்.
4
கடலின் நடுவில் உன்னைக் கட்டியவர்கள், உன்னை அழகுபடுத்த எவ்வளவோ முயன்றார்கள்!
5
சானிரிலிருந்து வந்த சப்பினி மரங்களால் உன் கப்பலையும் அதன் மேல்தட்டுகளையும் கட்டினார்கள்; லீபானின் கேதுரு மரத்தைக் கொண்டு உன் பாய்மரத்தைச் செய்தார்கள்.
6
பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால் கப்பல் துடுப்புகளைச் செய்தார்கள்; சிப்ருஸ் தீவுகளின் சவுக்குகளில் யானைத் தந்தங்களைப் பொருத்திக் கப்பலின் மேல்தளத்தை அமைத்தார்கள்.
7
எகிப்திலிருந்து வந்த சித்திரச் சணல் நூலாடை பாய்மரத்தில் பறக்கும் கொடியாயிற்று; எலிசா தீவிலிருந்து கிடைத்த நீலத்துணியும், சிவப்புத் துணியும் விதானமாயின.
8
சீதோன், அர்வாத் ஊர்களின் மக்கள் உன் கப்பல்களில் தண்டு வலித்தார்கள்; தீர் நகரே, உன்னிலிருந்த ஞானிகள் மாலுமிகளாய் இருந்தார்கள்.
9
கேபால் நகரத்து மூப்பரும் ஞானிகளும் பழுதுபார்க்கும் வேலை செய்தார்கள்; கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் கடலோடிகளும் உன் வணிக விருத்தியில் சிரத்தை கொண்டார்கள்.
10
பேர்சியர், லீதியர், லீபியர் முதலியோர் உன் படையில் வீரராய் இருந்தார்கள்; கேடயங்களையும் தலைச்சீராக்களையும் பூண்டு உனக்கு அணிகலனாய் இருந்தார்கள்.
11
அர்வாத்திரர் உன் படைவீரர்களுடன் உன் மதில்கள் மேல் சுற்றிலும் நின்றார்கள். பிக்மேயித்தார் உன் கோபுரங்களின் மேல் தங்கள் அம்பறாத்தூணிகளைத் தொங்க விட்டு உன் அழகை நிறைவு செய்தார்கள்.
12
கார்த்தேஜ; நகரத்து வியாபாரிகள் உன்னோடு வாணிகம் செய்தனர்; வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம், இன்னும் பல திரண்ட செல்வங்களையும் கொண்டு வந்து உன் சந்தைகளில் விற்றார்கள்.
13
கிரேசியா, தூபால், மொசோக் என்னும் இனத்தார் உன்னுடன் வணிகம் நடத்தினர்; உன் குடிகளுக்கு அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் கொடுத்துச் சென்றனர்.
14
தோகொர்மோ நகரத்தினின்று குதிரைகள், குதிரைக் காரர்கள், கோவேறு கழுதைகள் உன் சந்தைக்கு வந்தனர்.
15
தேதான் மக்கள் உன்னுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பல் தீவுகளின் வாணிகம் உன் கையில் இருந்தது; உன் பொருட்களுக்குப் பண்டமாற்றாக யானைத்தந்தங்களும் கருங்காலி மரங்களும் உனக்குக் கிடைத்தன.
16
சீரியரும் உன்னிடமிருந்த திரண்ட பொருட்களை முன்னிட்டு உன்னோடு வியாபாரம் செய்தனர்; சிவப்புக்கற்கள், சிவப்புப் பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், விலையுயர்ந்த சணல்நூற் புடவைகள், பட்டுப்பட்டாவளிகள் எல்லாம் உன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன.
17
யூதரும் இஸ்ராயேலரும் உன்னுடன் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டனர்; நல்ல கோதுமை, தைலங்கள், தேன், எண்ணைய், பிசின் முதலிய வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை உன் சந்தைகளுக்குக் கொண்டு வந்தார்கள்.
18
தமஸ்கு ஊரார் உன்னிடமிருந்த திரளான பொருட்களுக்குப் பதிலாகப் பலவகைச் சரக்குகளையும், கெல்போனின் திராட்சை இரசத்தையும், வெள்ளை ஆட்டு மயிரையும் உனக்குக் கொண்டு வந்தார்கள்.
19
தாண், கிரேசியா, மொசெல் ஆகியவையும் உன்னுடன் வாணிகம் நடத்தின; துலக்கப்பட்ட இரும்பு, நறுமணப் பொருட்கள் ஆகியற்றை உன் கடைகளில் குவித்தார்கள்;
20
தேதான் நாட்டினர் குதிரைச் சேணங்களைக் கொடுத்தார்கள்.
21
அரேபியா, கேதார் ஆகிய நாட்டுக் தலைவர்கள் அனைவரும் உன்னுடன் வியாபாரம் செய்து ஆட்டுக் குட்டிகளையும் கடாக்களையும் வெள்ளாடுகளையும் உனக்கு விற்றார்கள்.
22
சாபா, இரேமா பட்டணங்களின் வாணிகர் மிக அருமையான வாசனைப் பொருட்களையும் சிறந்த தைலங்களையும் இரத்தினக் கற்களையும் பொன்னையும் உனக்கு விற்றார்கள்.
23
ஆரான், ஷுனே, ஏதேன் பட்டணத்தாரும், சாபா, அசூர், கெல்மாத்து நாட்டாரும் உன்னுடன் வியாபாரம் செய்து பலவகைப் பொருட்களை உனக்கு விற்றார்கள்.
24
நீலப்பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், பலவண்ணக் கயிறுகளால் பின்னிய கம்பளங்கள் ஆகியவற்றை உனக்குக் கொண்டு வந்து விற்றார்கள்.
25
தர்சீஸ் பட்டணத்துக் கப்பல்கள் உனக்காக வாணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றன. "கடல் நடுவில் மகிமையடைந்து திரண்ட செல்வத்தால் நிறைந்திருந்தாய்.
26
தண்டுவலிப்பவர்கள் உன்னை ஆழ்கடலில் கொண்டு விட, கீழைக்காற்று எழும்பி உன்னை ஆழ்கடலில் உடைத்தது.
27
நீ அழிவுறும் நாளில், உன் செல்வங்களும் கருவூலங்களும், கணக்கற்ற பல்வேறு பொருட்களும், கடலோடிகளும் மாலுமிகளும், பழுது பார்ப்போரும் வாணிகம் செய்வோரும், உன் படைவீரர்களும் குடிமக்களும், எல்லாரும் உன்னோடு நடுக்கடலில் வீழ்ந்து மடிவார்கள்.
28
உன் மாலுமிகள் ஓலமிட்டலறும் சத்தம் சுற்றுப்புறத்து வயல்வெளிகளை அதிரச் செய்யும்.
29
மரக்கலங்களிலே தண்டுவலிப்பவர்கள், கடலோடித் தலைவர்கள், மாலுமிகள், அனைவரும் கப்பலை விட்டிறங்கிக் கரையிலே நிற்பார்கள்.
30
நீ இழந்தவற்றைக் குறித்துச் சத்தமாய்ப் புலம்புவார்கள், கவலைப்பட்டு அழுவார்கள்; தலை மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரண்டழுவர்;
31
தலைகளை மொட்டையடித்து, மயிரொட்டியாணம் உடுத்து, மனங்கசந்து ஓலமிட்டு அழுவார்கள், விம்முவார்கள்.
32
உன்மீது துக்கம் கொண்டாடிப் புலம்புவர்; 'கடலில் புதையுண்ட தீர் நகருக்குச் சரியொத்த நகருண்டோ?' என்றழுவர்.
33
உன் கடல் வாணிகப் பொருட்களால் பலநாட்டு மக்களை நிறைவு செய்தாய்; உன் திரளான செல்வத்தாலும் வணிகப் பொருட்களாலும், உலகத்தின் அரசர்களைச் செல்வர்களாக்கினாய்.
34
இப்பொழுதோ, கடல் உன்னை நொறுக்கிவிட்டது; உன் செல்வங்களெல்லாம் ஆழ்கடலில் மூழ்கிப் போயின; உன்னுடைய மக்களும் மாலுமிகளும் மாய்ந்தனர்.
35
கடற்கரையில் வாழும் மக்கள் அனைவரும் உன் முடிவைக்கண்டு, திகைப்புற்றார்கள்; அரசர்கள் அஞ்சி நடுங்கினார்கள்; அவர்கள் முகம் ஒளியிழந்து கலங்குகிறது.
36
புறவினத்தாரின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கிறார்கள்; நீயோ கொடிய முடிவை அடைந்தாய்; இனி நீ வாழவே மாட்டாய்."