ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: காட்டு மரங்களுக்குள்ளே ஒன்றான திராட்சைக் கொடியை நெருப்புக்கு இரையாக நாம் போட்டது போல, யெருசலேம் மக்களையும் தீக்கிரையாக்குவோம்.
நமது முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவோம்; அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்காமல் விடாது. நாம் நமது முகத்தை அவர்களுக்கு எதிராய்த் திருப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.