அப்பொழுது மோயீசன் (ஆண்டவரை நோக்கி): அவர்கள் என்னை நம்பவும் மாட்டார்கள்; என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவும் மாட்டார்கள்: ஆண்டவர் உனக்குக் காட்சி தரவில்லை என்று சொல்வார்களே என்று பதில் கூறினான்.
ஆண்டவர்: உன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே உனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர்கள் நம்பும் பொருட்டு (இதுவே அடையாளம்) என்றார்.
அப்பொழுது ஆண்டவர்: சிலவேளை அவர்கள் முந்தின அடையாளத்தைக் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், பிந்தின அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.
அவர்கள் இவ்விரண்டு அற்புதங்களையும் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், அப்பொழுது ஆற்று நீரை முகந்து அதைத் தரையிலே ஊற்று. ஆற்றில் முகந்த நீர் எல்லாம் இரத்தமாக மாறிப்போம் என்றார்.
மோயீசன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேளும்: நேற்றும் நேற்று முன்தினமும் நான் பேச்சுத் திறன் உள்ளவன் அல்லேன். சிறப்பாக, நீர் அடியேனுக்குத் திருவாக்கு அருளினது முதல், நான் திக்கு வாயனும் மந்த நாவு உள்ளவனும் ஆனேன் என்றான்.
மோயீசன் திரும்பிப் போய்த் தன் மாமனாகிய யெத்திரோவிடம் வந்து: எகிப்தில் இருக்கிற என் சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி நான் போய் வருகிறேன் என்று அவருக்குச் சொல்ல, யெத்திரோ: சமாதானமாய்ப் போய் வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆண்டவர் மதியானிலே மோயீசனை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போகலாம். ஏனென்றால், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து போனார்கள் என்று உரைத்தார்.
அப்பொழுது மோயீசன் தன் மனைவியையும் புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களைக் கழுதையின்மீது ஏற்றி, கடவுள் தந்த கோலைத் தன் கையில் எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் பயணமானான்.
எகிப்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஆண்டவர் அவனை நோக்கி: நாம் உன் கையில் வைத்துக் கொடுத்த எல்லா அற்புதங்களையும் பாரவோன் முன்னிலையில் செய்து காட்டக் கவனமாய் இரு. நாம் அவன் மனத்தைக் கடினமாக்கி விடுவோமாதலால், அவன் மக்களைப் போக விடான்.
நமக்கு ஆராதனை செய்யும்படி நம் புதல்வனை அனுப்பி விடு என்று நாம் உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ அவனை அனுப்பிவிட மாட்டேன் என்றாய். ஆதலால், இதோ நாம் உன் மூத்த மகனைக் கொல்ல இருக்கின்றோம் என்பாய் என்றார்.
உடனே செப்போறாள் மிகக் கூர்மையான ஒரு கல்லை எடுத்துத் தன் புதல்வனின் நுனித்தோலை வெட்டி, பின் அவன் கால்களைத் தொட்டு: நீர் எனக்கு இரத்தப் பழியின் கணவர் என்றாள்.
இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி: பாலைவனத்திலே மோயீசனுக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார். தெய்வ மலைப் பக்கம் அவனுக்கு எதிர்கொண்டு சென்ற, அவனை முத்தமிட்டான்.
மக்களும் நம்பினார்கள். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய தொல்லைகளைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் அவர்கள் அந்நேரம் அறிந்து கொண்டு, நெடுங்கிடையாய் விழுந்து தொழுதனர்.