அப்பொழுது பரிசுத்த இடத்துத் திருப் பணிகளுக்கடுத்த தட்டுமுட்டுக்களையும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்த மற்ற யாவற்றையும் சிற்பக்கலை முறைப்படி செய்வதற்கு ஆண்டவர் எவரெவர்க்கு ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் தந்தருளியிருந்தாரோ அவர்கள் -- அதாவது, பெசெலேயல், ஒலியாப் முதலிய தொழில் நுணுக்கம் படைத்த அனைவரும் -- மேற்சொன்ன வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.
இஸ்ராயேல் மக்கள் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தார். பின் அவர்கள் முழுமனத்தோடு வேலை செய்து வருகையில் மக்கள் காலை தோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
அதை கேட்டு மோயீசன்: இனி ஆடவரோ மகளிரோ பரிசுத்த இடத்துத் திருப்பணிக்கு வேறொரு காணிக்கையும் செலுத்த வெண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டார். மக்கள் கொடைகளைக் கொண்டு வருதல் இவ்விதமாய் நிறுத்தப்பட்டது.
வேலை செய்யும் மனம் படைத்தோர் யாவரும் திருஉறைவிடத்தை அமைப்பதற்குத் திரித்த மெல்லிய சணல்நூலாலும், நீல நூலாலும், கருஞ்சிவப்பு நூலாலும், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூலாலும், பல நிறமுள்ள வினோத நெசவுக் கலை முறைப்படி பத்து மூடுதிரைகளை அமைத்தனர்.
மேலும், சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு இன்னொரு மூடியையும், அதன் மேல் வைக்கத்தக்க ஊதாத் தோல்களால் ஆன வேறொரு மூடியையும் செய்தான்.
ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான்.
நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன. பக்கங்களின் காடி கழுத்துகள் சேரும் இடத்திலே மூலைகளின் இரு பக்கத்திலும் ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
மறு பக்கத்துப் பலகைகளைச் சேர்ப்பதற்காக வேறு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், அவை தவிர, கடலை நோக்கிய கூடார மேற்குப் புறத்திற்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அவன் செய்தான்.
அப்பலகைகளுக்குப் பொன் தகடு பொதிந்து அவற்றின் வெள்ளிப் பாதங்களையும் வார்த்து வைத்தான். குறுக்குச் சட்டம் எந்த வளையங்களில் ஊடுருவப் பாயுமோ அந்த வளையங்களையும் பொன் தகட்டால் மூடினான்.
நீல நிறம், கருஞ்சிவப்பு நிறம், இரத்த நிறம் கொண்ட நூல்கள், திரித்த மெல்லிய சணல் நூல்கள் இவற்றால் நெசவு செய்து, அழகான பின்னல் வேலைகளோடும் பற்பல நிறங்களோடும் சிறந்த ஒரு திரையை அமைத்தான்.
சேத்தீம் மரத்தால் நான்கு தூண்களைச் ( செய்து ), அவற்றையும் அவற்றின் போதிகைகளையும் பொன் தகட்டால் மூடினான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாலானதாம்.
கூடார வாயிலுக்காக நீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல்நூல் இவற்றால் நெசவு செய்து விசித்திரப் பின்னல் வேலையுடைய ஒரு தொங்கு திரையையும்,