நீங்கள் ஆறு நாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாளாகும். அது ஆண்டவருடைய ஒய்வு நாளாகிய சாபத்; அன்று வேலை செய்பவன் கொலை செய்யப்படுவான்.
(உங்கள் நிலங்களில் விளைந்த) முதற் பலன்களை ஆண்டவருக்காக உங்களிடம் தனிப்பட வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொருவனும் வலிய நிறைமனத்துடன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவான். (அவை எவையென்றால்) பொன் வெள்ளி வெண்கலங்கள்,
குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்வதற்குரிய ஆடை அணிகள், பரிசுத்த இடத்து ஊழியத்தில் உபயோகப் படும் உடைகள் ஆகிய இவைகளேயாம் என்றார்.
சாட்சியக் கூடாரத்தின் வேலையைச் செய்து முடிப்பதற்கும், அதன் திருவூழியத்திற்குத் தேவையான பரிசுத்த உடைகளைத் தயாரிப்பதற்கும் வேண்டிய காணிக்கைகளைப் பக்தியோடும் மனநிறைவோடும் ஆண்டவருக்குக் கொண்டு வந்தார்கள்.
நீலநிறம் கருஞ்சிவப்புநிறம், இருமுறை சாயந் தோய்த்த இரத்தநிறம், கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்கள், வெள்ளாட்டு உரோமம், சிவப்புச்சாயம் தேய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்கள்,
மகளிர் ஆடவர் எல்லாரும், ஆண்டவர் மோயீசன் மூலமாகக் கட்டளையிட்டிருந்த வேலைகள் நிறைவேறும் பொருட்டுப் பக்தியுள்ள மனத்தோடு அன்பளிப்புக்கள் கொண்டுவந்தனர். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மன உற்சாகத்துடன் காணிக்கைகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
மரத்திலே சித்திர வேலைகளையும், புதுவகைத் திரைகளையும், நீலநிறம், கருஞ்சிவப்பு நிறம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல், மெல்லிய சணல் நூல் இவைகளைக் கொண்டு பலவகை நிறமுள்ள வியப்பூட்டும் பின்னல் வேலை, நெசவு வேலை, புதிதான வினோத வேலை முதலியன வெல்லாம் செய்து முடிப்பதற்கு இருவருக்கும் திறமையைத் தந்தருளினார் என்று சொன்னார்