மேலும் அவர்கள் நமக்குக் குருத்துவ அலுவலுக்குரிய பட்டம் பெறும் பொருட்டு நீ செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதில்லாத இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் மந்தையினின்று எடுத்துக் கொள்வாய்.
பின் ஆரோனையும் ஆடை அணிகளை எடுத்து வந்து, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டையையும் கீழங்கியையும் எப்போத்தையும் மார்ப்பதக்கத்தையும் அவனுக்கு அணிவித்து மேலே விசித்திரக் கச்சையால் அவற்றைக் கட்டுவாய்.
இவ்வாறு ஆரோனும் அவன் புதல்வர்களும் உடுத்தப்பட்ட பின்பு அவர்களுக்குக் கிரீடங்களை அணிவிப்பாய். அவர்களும் நித்திய ஆராதனைக்காக நமக்குக் குருக்களாய் இருப்பார்கள். அவர்களுடைய கைகளையும் அபிசேகம் செய்த பின்,
பிறகு காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்துப் பீடத்துக் கொம்புகளின் மீது உன் விரலால் தடவி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிப்பீடத்துப் பாதத்தில் ஊற்றுவாய்.
நீ அதை அடித்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் வலக் காது மடலிலேயும், அவர்களுடைய வலக் கையின் பெருவிரலிலேயும் தடவி, மீதியான இரத்தத்தைப் பலிப்பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்து,
பீடத்தின் மீதிருக்கும் இரத்தத்திலும் அபிசேகத் தைலத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும், அவன் உடைகளின் மீதும், அவன் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகளின் மீதும் அதைத் தெளிப்பாய். (இவ்வாறு) அவர்களையும் அவர்கள் உடைகளையும் நீ அபிசேகம் செய்த பின்னர்,
அந்த ஆட்டுக்கிடாய் (ஆண்டவருக்கு) அர்ப்பணித்து ஒதுக்கப்பட்ட கிடாயாகையால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், வலப்பக்கத்து முன்னந் தொடையையும்,
பின்னர். அவர்களுடைய கைகளிலிருந்து அவையெல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆண்டவர் திருமுன் மிக்க நறுமணமுள்ள தகனப் பலியாகப் பலிப் பீடத்தின் மீது சுட்டெரிப்பாய். ஏனென்றால், இது அவருக்கான காணிக்கையே.
அன்றியும், ஆரோன் எந்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டானோ அந்தக்கிடாயிலுள்ள சிறிய மார்க் கண்டத்தை எடுத்து, அதை ஆண்டவர் முன்னிலையில் உயர்த்தி, உனக்குப் பங்கு என்று பத்திரப்படுத்துவான்.
ஆரோனும் அவன் புதல்வர்களும் அதைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டமையால், (மேற்சொன்ன மார்க்கண்டமும் முன்னந் தொடையும்) ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நித்திய உரிமையான பங்கு என்று இஸ்ராயேல் மக்களால் அளிக்கப்படும். ஏனென்றால், ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்ட சமாதானப் பலிகளில் அவை தலைக்காணிக்கையாய் இருக்கின்றன.
ஆரோன் அணிந்திருக்கும் பரிசுத்த ஆடை அணிகள் அவனுக்குப்பின் அவன் புதல்வர்களைச் சேரும். அவற்றை அணிந்தே அவர்கள் அபிசேகம் செய்யப்பட்டுக் கைப்பூசுதலைப் பெறக்கடவார்கள்.
அவன் புதல்வர்களில் எவன் அவனுக்குப் பதிலாய்த் தலைமைக் குருவாக நியமிக்கப் பட்டுப் பரிசுத்த இடத்தில் பணிவிடை செய்ய உடன்படிக்கைக் கூடாரத்திலே புகுவானோ அவன் ஏழு நாள் வரை அவற்றை அணிந்து கொள்ளக் கடவான்.
ஆனால், அருச்சித்து ஒதுக்கப்பட்ட இறைச்சிகளிலேனும் அப்பங்களிலேனும் ஏதாவது மீதியிருந்தால் அவற்றை நெருப்பில் சுட்டெரிப்பாய். அவை பரிசுத்தமானவையாதலால் உண்ணப்படலாகாது.
நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றையும் நீ ஆரோனிடத்தும் அவன் புதல்வர்களிடத்தும் நிறைவேற்றுவாயாக. அதாவது, ஏழு நாள் வரை அவர்களுடைய கைகளை அபிசேகம் செய்து,
ஒவ்வொரு நாளும் பரிகாரப் பலியாக ஒரு காளையைப் படைக்கக்கடவாய். பாவப் பரிகாரப் பலியிட்ட பின் பலிப்பீடத்தையும் சுத்திகரிப்பதற்கு அதை எண்ணெய் பூசி அபிசேகம் செய்யக்கடவாய்.
கின் என்னும் படியிலே காற்படி இடித்து, பிழிந்த எண்ணெயிலே எப்பி என்னும் மரக்காலிலே பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைப் பிசைந்து, அந்த மாவையும், பானபலியாகக் காற்படித் திராட்சை இரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் ஒப்புக் கொடுக்கவேண்டும்.
நீங்கள் தலைமுறை தலைமுறையாக நித்தியமாய் ஆண்டவருக்குச் செலுத்தவேண்டிய பலி இதுவே. இனி நாம் உன்னுடன் எவ்விடத்திலே பேசத் தீர்மானித்துக் கொண்டோமோ அந்த ஆண்டவருடைய சந்நிதியாகிய சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலேயே அதைப் படைக்க வேண்டியதாய் இருக்கும்.
அபொழுது, தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும், தங்களோடு கூடவாழும்படி தங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும் அவர்கள் அறிவார்கள்.