மாட்டையோ ஆட்டையோ திருடிக்கொன்றுவிட்டவன் அல்லது விற்றுவிட்டவன் அந்த ஒரு மாட்டுக்கு ஐந்து மாடுகளையும் ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
சூரியன் உதித்தபின் அதைச் செய்திருந்தாலோ, அது கொலை பாதகமாகையினாலே, அவன் கொலை செய்யப்படுவான். திருட்டுக்கு ஈடு செய்யத் திருடன் கையில் ஒன்றுமில்லையாயின், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
நெருப்பு எழும்பி முட்களின் மேல் விழுந்து, அதிலிருந்து தானியப் போரிலேயாவது விளைந்த பயிரிலேயாவது பற்றி எரித்து விடின், நெருப்பைக் கொளுத்தினவன் அழிவிற்கு ஈடு செய்யக்கடவான்.
ஒருவன் தன் நண்பனிடம் பணத்தையோ உடைமையையோ அடகு வைத்திருக்கும் போது, அது அவன் வீட்டிலிருந்து திருட்டு போனால், திருடன் அகப்பட்டால் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவான்.
ஒருவன் தன் கழுதை, ஆடு, மாடு, முதலிய மிருகங்களைப் பிறன் பொறுப்பில் ஒப்புவித்து விட்டிருக்கும் போது, அது இறந்தாலும், மெலிந்து போனாலும், பகைவரால் பறிபட்டுப் போனாலும், சாட்சிகள் ஒருவனும் இல்லாது போனால்,
சபையின் முன்பாக (பிரதிவாதி) தான் அயலானுடைய பொருளைக் கையாலே தொடவில்லையென்று ஆணையிட்டுச் சொல்வான். உரிமையாளன் அதை ஏற்கவேண்டும். மற்றவனோ ஒன்றும் அளிக்க வேண்டுவதில்லை.
அப்படிப்பட்ட வகைகளில் எதையேனும் ஒருவன் இரவலாக வாங்கியிருப்பின், அது தலைவனுக்குத் தெரியாமல் இறந்தாவது அழிந்தாவது போயிருப்பின், அவன் அதற்கு ஈடு செய்யவேண்டும்.
உன்னோடு குடியிருக்கிற நம் மக்களில் ஏழையான ஒருவனுக்கு நீ கடனாகப் பணம் கொடுத்திருப்பாயாகில், அவனை நெருக்கடி செய்யவும் மிதமிஞ்சின வட்டி வாங்கவும் வேண்டாம்.
ஏனென்றால், அவன் தன் உடலை மூடி உடுத்துவதற்கு அது ஒன்றேயன்றி, போர்த்திப்படுத்துக் கொள்வதற்கு வேறு இல்லை. அவன் நம்மை நோக்கி முறையிடும் போது, இரக்கமுள்ளவராகிய நாம் அவனுக்குச் செவி கொடுப்போம்.