மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவராய் இருக்கிற நாம் வல்லவரும் எரிச்சல் உள்ளவருமாய் இருக்கிறோம்; நம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்து, தந்தையரின் அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரித்து வருகிறவராய் இருக்கிறோம்.
எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்.
ஏனென்றால், ஆண்டவர் ஆறு நாளில் விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டமையால், ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.
உன் அயலான் வீட்டை விரும்பாதே: அவனுடைய மனைவியையாவது, வேலைக்காரனையாவது, வேலைக்காரியையாவது, மாட்டையாவது, கழுதையையாவது, மேலும் அவனுக்குக் கிடைத்த யாதொன்றையாவது விரும்பாதிருப்பாயாக என்றருளினார்.
அதற்கு மோயீசன்: அஞ்ச வேண்டாம். உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் அவருக்குப் பயந்து பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும் கடவுள் இவ்வாறு எழுந்தருளி வந்தார் என்றார். மக்கள் தூரத்திலே நின்று கொண்டிருந்தனர்.
நம்முடைய பெயர் கொண்டாடப்படும் இடத்தில் நீங்கள் மண்ணாலே ஒரு பலிப்பீடத்தைக் கட்டி எழுப்பி அதன்மேல் தகனப் பலியாகவும் சமாதானப் பலியாகவும் உங்கள் ஆடுமாடு முதலியவற்றைச் சமர்ப்பித்து வாருங்கள். நாம் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்போம். சில வேளை கல்லினாலே பலிப்பீடத்தை நமக்குக் கட்டுவீர்களாயின்,