நீங்கள் இஸ்ராயேல் மக்களின் கூட்டத்தார் யாவரையும் அழைத்துச் சொல்ல வேண்டியதாவது: இம்மாதத்தின் பத்தாம் நாள் குடும்பத்திற்கும் வீட்டிற்குமாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆட்டுக் குட்டியை தெரிந்தெடுக்கக்கடவர்.
ஆனால், ஒருவன் வீட்டில் இருக்கிறவர்கள் ஆட்டுக் குட்டியை உண்பதற்குப் போதுமானவர்களாய் இராமற்போனால், அவன், தன் அயல் வீட்டாரில் ஆட்டுக் குட்டியை உண்பதற்குத் தேவையான பேரை அழைத்து வருவான்.
பச்சையாயும் நீரில் அவிக்கப்பட்டதாயும் உள்ள இறைச்சியில் ஒன்றும் உண்ணாமல், அடுப்பிலே பொரித்த கறியை மட்டும் உண்ணவேண்டும். (ஆட்டின்) தலை, கால், குடல் முதலிய எல்லாவற்றையும் உண்பீர்களாக.
அதனை உண்ணவேண்டிய முறையாவது: நீங்கள் இடுப்பிலே கச்சை கட்டிக் காலிலே செருப்பு அணிந்தவர்களாயும், கையிலே கோலைப் பிடித்தவர்களாயும், அதனை விரைந்து உண்ணக் கடவீர்கள். ஏனென்றால் அது ஆண்டவருடைய பாஸ்கா (அதாவது: ஆண்டவருடைய கடத்தல்).
உண்மையில் அந்த இரவிலே நாம் எகிப்து நாடெங்கும் கடந்து போய், எகிப்திலுள்ள மனிதன் முதல் விலங்கு வரை தலைப் பேறானவை யெல்லாம் கொன்று, எகிப்தியத் தேவதைகளின் மீது நீதியைச் செலுத்துவோம்.
நாமே ஆண்டவர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தைக் காணவே, உங்களை நாம் கடந்து போவோம். இவ்வாறு, நாம் எகிப்து நாட்டைத் தண்டிக்கும்போது, கொள்ளைநோய் உங்கள்மேல் வந்து அழிக்காதிருக்கும்.
(அது எவ்வித மென்றால்,) புளியாத அப்பங்களை ஏழு நாள்வரை உண்பீர்கள். முதல் நாளில் புளித்த மாவு வீட்டில் இருக்கக்கூடாது. முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரை புளித்த அப்பம் உண்பவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்கப்படுவான்.
முதல் நாள், பரிசுத்த நாளும் சிறப்பாய்க் கொண்டாட வேண்டிய திருவிழாவும் ஆகும். ஏழாம் நாளும் அதுபோலவே வணக்கத்துக்குரியதாய் இருக்கும். அவற்றில் வேலையொன்றும் செய்யலாகாது. நீங்கள் உண்பதற்குத் தேவையான வேலையை மட்டும் செய்யலாம்.
புளியாத அப்பத்தின் அந்தத் திருவிழாவைக் கொண்டாடுவீர்களாக. ஏனென்றால், அந்நாளிலே நாம் உங்கள் படையை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்வோம். நீங்களும், உங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாய் அந்த நாளைக் கொண்டாடக் கடவீர்கள்.
ஏழு நாள் வரை புளிப்பு உங்கள் வீடுகளில் இல்லாதிருக்கக் கடவது. அந்நியரிலாவது குடிமக்களிலாவது எவனேனும் புளிப்புள்ளதை உண்டிருப்பானேல், அவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்குண்டு போவான்.
பின் ஈசோப்புக் கொழுந்துக் கொத்து எடுத்து வந்து, அதைக் கிண்ணியிலுள்ள இரத்தத்தில் தோய்த்து, வாயில் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள். விடியற்காலை வரை உங்களில் ஒருவரும் வீட்டுவாயிலைக் கடக்கக் கூடாது.
ஏனென்றால், ஆண்டவர் எகிப்தியரை அழிப்பதற்குக் கடந்து வரும்போது, கதவுநிலையின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தம் இருப்பதைக் காணும்போது, அழிப்போனை உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்கவிடாமல், வாயிற்படியை விலகிக் கடந்து போவார்.
நீங்கள்: இது ஆண்டவருடைய கடத்தற்கு உரிய பலியாம்; அவர் எகிப்தியரை அழித்த போது, எகிப்திலுள்ள இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்துபோய், நமது வீடுகளைக் காத்தருளினார் என்று அவர்களுக்குச் சொல்வீர்கள் என்றார். (இதைக் கேட்ட) மக்கள் தலைவணங்கித் தொழுதனர்.
பிறகு நிகழ்ந்தது என்னவென்றால், நள்ளிரவில் அரியணையில் வீற்றிருந்த பாரவோனின் தலைப் பிள்ளை முதல் சிறையில் அடைபட்டிருந்த அடிமைப்பெண்ணின் தலைப் பிள்ளை வரை எகிப்து நாட்டிலிருந்த முதற் பேறு அனைத்தையும் மிருகங்களில் தலையீற்று அனைத்தையும் ஆண்டவர் அழித்தார்.
இரவிலே பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்களும் இஸ்ராயேல் மக்களும் எழுந்து என் மக்களை விட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்குப் பலியிடுங்கள்.
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்த மாவைப் புளியாத அப்பங்களாகச் சுட்டனர். அவை புளியாத அப்பங்களாய் இருந்தன. ஏனென்றால், எகிப்தியர் அவர்களைத் தாமதிக்கவிடாமல் விரைவில் புறப்பட்டுப் போகக் கட்டாயப் படுத்தினதினாலே, அவர்கள் பயணத்திற்கென்று தங்களுக்கு ஒன்றும் தயாரித்துக்கொள்ளவில்லை.
ஆண்டவர் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த அந்த இரவு பெரிய திருநாள் ஆயிற்று. இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தலைமுறை தோறும் அதனை அனுசரிக்கக் கடமைப்பட்டனர்.
அந்நியன் ஒருவன் உங்களிடம் வந்து குடியேற மனம்கொண்டு பாஸ்காவை அனுசரிக்கக் கேட்டால், முதன் முதல் அவனைச் சேர்ந்த ஆண்களெல்லாம் விருத்தசேதனம் செய்யப் படுவார்கள். பின் அவன் (அதைச்) சட்டப்படி கொண்டாடக் கடவான். அவன் அப்போது அந்நாட்டுக் குடிமகன் போலிருப்பான். ஆனால், விருத்த சேதனமில்லாத எவனும் அதை உண்ண வேண்டாம்.