பின்னர், அவர் தம் 'கொடைகளை' அருளிச் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியின் தூதர்களாகவும் ஆயர்களாகவும் போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
இவ்வாறு, இறுதியாக நாம் எல்லாரும் கடவுளின் திரு மகனைப் பற்றிய விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை எய்துவோம்; கிறிஸ்துவினுடைய முழுப் பருவத்தின் அளவை அடைந்து முதிர்ச்சிபெற்ற மனிதனாவோம்.
ஆகவே, இனி நாம் குழந்தைகளாய் இருத்தலாகாது. மனிதருடைய சூழ்ச்சியையும், கைதேர்ந்த ஏமாற்று வித்தையையும் நம்பி, அவர்களுடைய போதனையாகிய காற்றால், அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.
இறுக்கிப் பிணைக்கும் தசை நார்களால் உடல் செயலால் முழுமையும் அவர் ஒன்றாய் இணைந்து, இசைவாய்ப் பொருந்தி இருக்கிறது. அதனால், ஒவ்வொரு உறுப்பும் அதனதன் அலுவலுக்கேற்பச் செயல்படுவதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பினால் கட்டடமாக எழும்புகிறது.
எனவே ஆண்டவருக்குள் நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூறுவதாவது. புற இனத்தார் நடப்பதுபோல் இனி நீங்கள் நடக்கலாகாது. அவர்கள் மனத்தில் தோன்றும் எல்லா வீண் எண்ணங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர்.
தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட் பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளையே சொல்லுங்கள்.