ஒரு காலத்தில் வான்வெளியில் தலைவனுக்கு அடங்கி இவ்வுலகப் போக்கின் படி பாவ வழியில் நடந்தீர்கள். இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்பொழுது செயலாற்றும் அந்த ஆவிக்குப் பணிந்து இருந்தீர்கள்.
இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். தம்முடைய ஊனியல்பின் இச்சைகளின்படி வாழ்ந்து, அவ்வியல்பும் அதன் நாட்டங்களும் தூண்டியவாறு நடந்து, மற்றவர்களைப் போல நாமும் இயல்பாக இறைவனின் சினத்திற்கு ஆளாகியிருந்தோம்.
எனவே, உங்கள் முன்னைய நிலையை எண்ணிப் பாருங்கள்: பிறப்பால் புற இனத்தாராகத் தானே இருந்தீர்கள். கையால் செய்த விருத்தசேதனத்தை உடலில் மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் பெறாதவர்கள் என இகழ்ந்தார்கள்.
ஒரு காலத்தில் மெசியாவின்றி, இஸ்ராயேலரின் சமுதாயத்தோடு உறவின்றி இருந்தீர்கள்; வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைகளுக்கு அந்நியராகவும் இருந்தீர்கள். நம்பிக்கையற்றவராய் கடவுள் இல்லாதவராய் இவ்வுலகில் இருந்தீர்கள்.
இவ்விரு இனத்தாரிலிருந்தும் தமக்குள் புதியதொரு மனுக்குலத்தைப் படைத்துச் சமாதானம் செய்யும்படி, பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை வெறுமையாக்கினார்;