(15) வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது.
(16) மேலும், என் வீணான நாட்களில் நான் கண்டது என்ன வென்றால்: நீதியாய் நடக்கிற நீதிமான் துன்பத்தில் இருப்பதைக் கண்டேன்; அக்கிரமமாய் நடக்கிற பாவி வெகுநாள் வாழ்வதைக் கண்டேன்.
(27) இப்படித் தேடினபோது, பெண்கள் சாவைக் காட்டிலும் கசப்புள்ளவர்களென்றும், அவர்கள் நெஞ்சம் வேடர்களின் கண்ணியும் வலையும் போன்றதென்றும், அவர்கள் கைகள் சங்கிலிகளென்றும் கண்டேன். கடவுளுக்கு முன்பாக நீதிமானாய் உள்ளவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டான். பாவிகளோ அவர்கள் கையில் அகப்படுவார்கள்.
(29) ஒப்பிட்டுப் பார்த்தும், அந்த காரணத்தை நான் கண்டுபிடியாமல், ஒரு காரியத்தை மட்டும் நிச்சயமென்று கண்டேன். அது என்ன வென்றார்: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு (நல்ல) ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு (நல்ல) பெண்ணை நான் காணவில்லை.
(30) இதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அதாவது: கடவுள் மனிதனை நேர்மை உள்ளவனாகவே படைத்தார். மனிதனோ பலப்பல காரியங்கள் ஆராய முற்பட்டு, அவைகளில் தானே தனக்கு விலங்கிட்டுக் கொண்டான். இதைக் கண்டுபிடிக்கத் தக்க ஞானியும் எங்கே? இந்த வாக்கின் விளக்கம் சொல்லத் தக்க (அறிஞனும்) எங்கே?