English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Ecclesiastes Chapters

Ecclesiastes 5 Verses

1 (4:17) நீ கடவுளின் ஆலயத்தினுள் புகும்போது அமைதியாய் நடக்கவும், அண்மையில் போய்ச் செவி கொடுத்துக் கேட்கவும் கடவாய். தாங்கள் செய்து வருகிற பொல்லாப்பைப்பற்றி ஒரு சிறிதும் கருதா மூடர்கள் இடும் பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
2 (1) உன் வாயினாலே துணிச்சலாய்ப் பேசாதே. கடவுளுடைய சமூகத்தில் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாதே. ஏனென்றால், கடவுள் வானகத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய். ஆதலால், உன் வார்த்தைகள் கொஞ்சமாய் இருப்பனவாக.
3 (2) அதிகமான கவலைகளாலே கனவுகள் பிறப்பதுபோல் அதிகமான வார்த்தைகளாலே மூடத்தனம் காணப்படும்.
4 (3) நீ கடவளுக்கு ஒரு நேர்ச்சை செய்து கொண்டிருப்பாயாகில் அதைச் செலுத்தத் தாமதியாதே. பொய்யாய் மூடத்தனமாய்க் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அவர் வெறுக்கிறார். நீ நேர்ந்து கொண்டதைச் செய்.
5 (4) உள்ளபடி நேர்ந்து கொண்டதைச் செய்யாமல் போவதைக்காட்டிலும் நேர்ந்து கொள்ளாமலிருப்பதே நல்லது.
6 (5) உன் உடலைப் பாவத்துக்கு உள்ளாக்க உன் வாயைப் பேசவிடாதே. மேலும், தெய்வச் செயல் என்று ஒன்றும் இல்லை என்று வானவன்முன் சொல்லாதே. சொன்னால், சிலவேளை கடவுள் உன் வார்த்தைகளாலே கோபங் கொண்டு உன் கைகளின் செயல்கள் எல்லாவற்றையும் அழித்தாலும் அழிக்கலாம்.
7 (6) கனவுகள் அதிகரிக்க, வியர்த்தங்களும் பேச்சுகளும் கணக்கின்றிமிகும். நீயோ கடவுளுக்கு அஞ்சியிரு.
8 (7) ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நியாயமும் நீதியும் புறக்கணிக்கப்படுவதையும் நீ காண்பாயாகில் அதைப்பற்றி வியப்படையாதே. ஏனென்றால், உயர்ந்தவனுக்குமேல் அதிக உயர்ந்தவனும் உண்டு. இவர்களுக்குமேல் இன்னும் அதிக மேற்பட்டவர்களும் உண்டு.
9 (8) கடைசியிலே உயர்ந்தவர்கள் எல்லாருக்கும் மேலாக ஓர் அரசனும் உண்டு. அவன் தன் நாடெங்கும் ஆட்சி செலுத்தி வருகிறான்.
10 (9) கஞ்சன் பணத்தினால் நிறைவு கொள்வதில்லை. பணத்தின்மேல் ஆசையாய் இருக்கிறவன் அதனால் பலனைப் பெறுவதில்லை. அது வீண் காரியம் அன்றோ?
11 (10) செல்வம் அதிகரிக்க, அதை உண்பவர்களும் மிகுவர். அதை உடையவனோ தன் கண்களினாலே செல்வங்களைக் காண்பதன்றி அவனுக்கு வேறென்ன பயன்?
12 (11) வேலை செய்து உழைக்கிறவன் அதிகம் உண்டாலும் கொஞ்சம் உண்டாலும் இன்பமாய்த் தூங்குவான். செல்வனுடைய செல்வப் பெருக்கோ அவனைத் தூங்க விடாது.
13 (12) இன்னமும் சூரியன் முகத்தே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு. அது என்னவென்றால், செல்வந்தன் தனக்குக் கேடுண்டாகத் தன் செல்வத்தைக் காப்பாற்றுவதாம்.
14 (13) ஏனென்றால், அந்தச் செல்வம் அழிந்துபோகிறது; அழிந்து போகிறதைக் கண்டு (அவன்) மிகக் கொடிய துயரம் அடைகிறான். அவன் பெற்ற பிள்ளைக்கு ஒன்றும் இல்லை.
15 (14) அவன் தாயின் கருவிலிருந்து அம்மணமாய் வெளிப்பட்டதுபோல் அம்மணமாய்ப் போவான். அவன் செய்த உழைப்பினால் உண்டான பொருள் ஒன்றையும் கையில் எடுத்துக் கொண்டு போவதில்லை.
16 (15) இது மிக வருந்தத்தக்க செயலன்றோ? அவன் வந்ததுபோலவே திரும்பிப் போவான். அவன் இப்படி வீணில் உழைத்தனால், அவனுக்குப் பயன் என்ன?
17 (16) அவன் தன் வாழ்நாளெல்லாம் இருட்டில் பல கவலையோடும் துன்ப துயரங்களோடும் கஞ்சி குடித்தானே!
18 (17) ஆகையினால், ஒருவன் உண்டு குடித்து உயிரோடிருக்கும்படி கடவுள் அவனுக்கு அருளிய வாழ்நாள் முழுதும் (அவன்) சூரியன் முகத்தே வருந்திச் செய்த வேலையின் பயனை அனுபவிப்பது நலமென்று எனக்குத் தேன்றியது. இதுவே அவனுடைய பங்கு.
19 (18) கடவுள் செல்வங்களையும் சொத்துகளையும் எவனுக்குத் தந்தருளினாரோ அவன் அவற்றினின்று உண்டு, தன் பங்கென்று பெற்று இன்புற்று, தன் உழைப்பிலே மகிழ்ச்சியடைந்தால், அது கடவுளுடைய அருளேயாம்.
20 (19) கடவுள் அவனுடைய இதயத்திற்கு இன்பத்தைத் தந்தருளினபடியால் அவன் தன் வாழ்நாட்களை அதிகமாய் நினையான்.
×

Alert

×