நான் வேறு காரியங்களையும் ஆராய்ந்து பார்த்தேன். சூரியன் முகத்தே சொல்லப்படும் புறணிகளையும், குற்றமில்லாதவர்கள் சிந்தும் கண்ணீர்களையும் கண்டேன். அவர்களைத் தேற்றுவார் இல்லை. அவர்களுக்கு உதவிசெய்வார் இல்லை. ஒடுக்குகிறவர்களுடைய பளுவைத் தடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.
பிறகு மனிதர்கள் படும் எல்லாத் துன்பங்களையும்ஆராய்ந்து சிந்தித்தபோது, அவர்களுடைய சொந்த முயற்சிகள் அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதைக் கண்டேன். இவைகளும் வீணானதாயும் பயனற்றதாயும் இருக்கின்றன அல்லவா?
(அது என்னவென்றால்) ஒருவன் மகனுமன்றிச் சகோதரனுமின்றித் தனித்து இருக்கிறான். அப்படியிருக்க, அவன் ஓயாது வேலை செய்தாலும், அவன் கண்கள் செல்வத்தால் நிறைவு கொள்வதில்லை. அவன்: ஒரு நன்மையையும் நான் அனுபவிக்காமல் உழைப்பது யாருக்காகத்தான் என்று சிந்திக்கிறதில்லை. இதுவும் வீணானதும் பொல்லாத தொல்லையுமாய் இருக்கிறதன்றோ?
அவனுக்கு முன்னிருந்த எல்லா மனிதர்களின் எண்ணிக்கை முடிவில்லா எண்ணிக்கை. அவனுக்குப்பின் வருபவர்கள் அவன் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். இதுவும் வீணும் மனத்துக்கமும் அன்றோ?