ஆகையால், நான் உன் கண்களுக்குமுன் எடுத்துக் காட்டிய ஆசீருக்கு அல்லது சாபத்திற்கு அடுத்த இந்தக் காரியங்ளெல்லாம் உன்பால் நிறைவேறிய பின்பு, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்த எல்லா இனத்தாரிடையேயும் இருந்து நீ உன் இதயத்தில் வருந்தி,
அவர் பக்கமாய்த் திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடி நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அவருடைய கட்டளைகளை அனுசரித்து நிறைவேற்றுவீர்களாயின்,
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிறையின்று விடுதலையாக்குவார். அவர் உனக்கு இறங்கி, உன்னைச் சிதறடித்துள்ள எல்லா இனத்தவர்களிடயேயுமிருந்து உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்.
அவர் உன்னை எடுத்து, உன் மூதாதையர் உரிமையாக்கிக் கொண்ட நாட்டில் உன்னைச் சேர்த்து நீ அதை உரிமையாக்கிக் கொள்ளச் செய்து, தம் ஆசீரால் உன் மூதாதையரைக் காட்டிலும் உன்னை அதிகமாய்ப் பெருகச் செய்வார்.
மேலும், நீ வாழ்வு பெறும் பொருட்டு உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவேடும் அன்புசெய்யும்படியாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இதயத்தையும் உன் சந்ததியாரின் இதயத்தையும் விருத்தசேதனம் செய்து,
அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உன் கருவின் கனிகளிலும் உன் மிருகவுயிர்களின் பலன்களிலும் உன் நிலத்தின் விளைச்சல்கள் முதலிய எல்லா நன்மைகளிலும் உனக்கு முழுநிறைவு உண்டாகச் செய்வார். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் மீது மகிழ்வு கொண்டது போல் உன் மீதும் விருப்பம் கொண்டு, எல்லா நன்மைகளையும் ஏராளமாய் உனக்கு அருளும்படி திரும்பி வருவார்.
ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்குச் செவிகொடுத்து, இந்த நூலில் எழுதப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளையும் சடங்குமுறைகளையும் கைக்கொண்டு அனுசரித்து, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடமாய்த் திரும்பினால் மட்டுமே (முன் குறிக்கப்பட்ட நன்மைகளைப் பெறுவாய்).
நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி செய்யும்பொருட்டு, எங்களுக்காக வானத்தில் ஏறிக்கொண்டு வரத்தக்கவன் யார் என்னறு நீ சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) வானத்தில் வைக்கப்பட்டதும் அன்று;
நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதன்படி நடக்கும்பொருட்டு, எங்களுக்காகக் கடலைத் தாண்டிகொண்டு வரத்தக்கவன் யார் என்று நீ சாக்குப்போக்குச் சொல்லும்படிக்கு, (அந்தக் கட்டளை) கடலுக்கு அப்பால் வைக்கப்பட்டதும் அன்று, நீ அந்தக் கட்டளையின்படி நடக்கும்பொருட்டு,
நீ வாழ்ந்து பெருகவும், நீ உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்படிக்கும் நீ அவர் பால் அன்புகொள்ளவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரிக்கவும் கடவாய்.
நான் வாழ்வையும் சாவையும், ஆசீரையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைத்துக் காட்டினேன் என்பதற்கு விண்ணையும் மண்ணையும் இன்று சாட்சியாய் வைக்கிறேன். ஆதலால், நீயும் உன் சந்ததியும் வாழ்வு பெறவும்,
உன் உயிரும் நிடிய வாழ்வுமான ஆண்டவர், ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டிலே நீ குடியேறவும், நீ உயிரைத் தேர்ந்துகொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர்பால் அன்புகூர்ந்து, அவருடைய திருவுளத்துக்கு அமைந்து, அவரைப் பற்றிக்கொள்வாய் என்றார்.