ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்கு நீ செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு ஒழுகுவாயாகில், உன் கடவுளாகிய ஆண்டவருடைய பூமியிலுள்ள எல்லா இனத்தாரைக்காட்டிலும் உன்னை மேன்மைப்படுத்துவார்.
உனக்கு விரோதமாய் எழும் உன் பகைபார்கள் உனக்குமுன்பாக நிற்கமாட்டாமல் புறமுதுகு காட்டி ஓடும்படி ஆண்டவர் செய்வார். அவர்கள் ஒரு வழியாய் உனக்கு எதிராக வருவார்கள்; ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன் ஓடிப்போவார்கள்.
ஆண்டவர் உன் கொடிமுந்திரிப் பழச்சாற்றுக் கிடங்குகளிலும், நீ கையால் செய்யும் எல்லா வேலைகளிலும் உனக்கு ஆசீர் அளிப்பார். உனக்கு அளிக்கப்படும் நாட்டிலும் உனக்கு ஆசீர் அளிப்பார்.
நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து அவருடைய வழிகளில் நடப்பாயாயின், அவர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்குப் புனித இனமாக ஏற்படுத்துவார்.
உனக்குக் கொடுப்போம் என்று ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொல்லிய நாட்டில் உன் கருவின கனியிலும், உன் மிருகவுயிர்களின் பெருக்கத்திலும், உன் நிலத்தின் பலனிலும் பற்பலவித நன்மைகளும் உனக்கு நிறைவாய் இருக்கச் செய்வார்.
தகுந்த காலத்தில் மழைபெய்யும்படிக்கு ஆண்டவர் தமது சிறந்த செல்வமாகிய வானத்தைத் திறப்பார். நீ செய்யும் கைவேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பார். நீ பல இனத்தாருக்குக் நீ கடன் கொடுத்து, எவர் கையிலும் நீ கடன் வாங்காதிருப்பாய்.
ஆண்டவர் உன்னைக் கடைசியாக வைக்காமல் முதன்மையாகவே உன்னை நியமிக்கவும், நீ ஒருகாலும் கீழாகாமல் எப்போதும் மேற்பட்டவனாய் இருக்கவும் விரும்புவாயாகில், நான் இன்று உனக்கு விதிக்கிற உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளுக்கு நீ செவி கொடுக்கவும், அவைகளைக் கைக்கொண்டு நிறைவேற்ற வேண்டியதுமன்றி,
இன்று நான் உனக்கு விதிக்கின்ற உன் கடவுளாகிய ஆண்டவருடைய எல்லாக் கட்டளைகளின்படியும், ஆசாரமுறைகளின் படியும் நடக்கும்படியாக நீ ஆண்டவருடைய குரலுக்குச் செவி கொடாதிருப்பாயாகில், (பின்வரும்) சாபங்கள் உன்மேல் வந்து உன்னைவிட்டு நீங்காமல் இருக்கும்.
நீ ஆண்டவரை விட்டுவிடக் கருதிச் செய்திருக்கும் வெறுப்பூட்டும் உன் செயல்களின் பொருட்டு நீ விரைவில் கெட்டு அழியுமட்டும், ஆண்டவர் வறுமையையும் பசி வேதனையையும் உன்மீது வரச்செய்து, நீ கையிட்டுச் செய்துவரும் எல்லாவற்றையும் கெட்டுப் போகச் செய்வார்.
உன் பகைவர்களுக்கு முன்பாக நீ முறியடிக்கப்பட்டு, ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ, ஏழு வழியாய் ஓடிப்போய், உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சிதறுண்டு போகும்படி ஆண்டவர் செய்வார்.
எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலம் முதலிய மெல்லிய இடங்களின் புண்களினாலும், சிரங்கு முதலிய சொறிகளினாலும் நீ குணமடையாதபடிக்கு அவர் உன்னை வதைப்பார். பைத்தியத்தினாலும்,
குருடன் இருளிலே தடவித் தடவிக் திரிகிறது போல, நீ பட்டப்பகலிலே வழி தெரியாமல் தடவித் திரிவாய். நீ எந்நாளும் மனிதர்களுடைய கோள் குண்டணிகளுக்கு உட்பட்டவனாயும், உதவி செய்வாரில்லாமல் அவர்களுடைய கடுமை முதலிய வல்லடிக்கு இலக்காயும் இருப்பாய்.
நீ மணந்து கொண்ட பெண்ணை மற்றொருவன் அனுபவிப்பான். நீ கட்டின வீட்டிலே குடியேறக் கூடாமற் போவாய். நீ நட்டிய கொடி முந்திரித்தோட்டத்துப் பலனை நீ அனுபவிக்க மாட்டாய்.
உன் மாடு உன் கண்ணுக்கு முன்பாக அடிபடும். நீ அதில் ஒன்றும் உண்ணக் கூடாமற் போவாய். உன் கழுதை உன் கண் பார்வைக்குமுன் கொள்ளையிடப்பட்டும், அது உனக்குத் திரும்பக்கொடுக்கவும் படாது. உன் ஆடுகள் உன் பகைவருக்குக் கொடுக்கப்பட்டு, அவைகளை விடுவிப்பார் ஒருவரும் இருக்க மாட்டார்.
நீ பார்க்க, உன் புதல்வர்களும் புதல்வியரும் புற மக்களுக்குக் கையளிக்கப்படுவார்கள். நாள் முழுதும் அவர்களைப் பார்த்து பார்த்து உன் கண்கள் பூத்துப் போகும். உன் கையும் சோர்ந்து பலனில்லாது போகும்.
உனக்கும் உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் உன்னையும் உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட உன் அரசனையும் போகச் செய்வார். அங்கே நீ மரமும் கல்லுமான தேவர்களை வணங்கி ஆராதிப்பாய்.
கொடிமுந்திரித் தோட்டத்தை நட்டுப் பயிரிடுவாய். ஆனால் கொடி முந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவுமாட்டாய்; பழங்களைச் சேர்க்கவுமாட்டாய். பூச்சி அதைத் தின்றொழிக்கும்.
நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய சொல்லைக் கேளாமலும், அவர் உனக்கு கற்பித்த கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரியாமலும் போனதால் அந்தச் சாபமெல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் கொடர்ந்து வதைக்கும்.
பசி தாகம் நிர்வாணம் முதலிய எல்லாக் குறையும் வெறுமையும் அனுபவித்து, ஆண்டவர் உனக்கு விரோதமாய் அனுப்பும் பகைவர்களுக்குப் பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழிக்குமட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தின் மேல் வைப்பார்கள்,
உனக்குக் தெரியாத மொழியைப் பேசுகிறதும், வேகமாய்ப் பறக்கிற கழுகுக்கு நிகரானதுமான ஓர் இனத்தை மிகத் தொலைவிலுள்ள நாட்டின் கடைக் கோடியிலிருந்து ஆண்டவர் உன்மேல் வரச் செய்வார்.
நீ அழிந்து போகுமட்டும் அந்த இனத்தான் உன் மிருகவுயிர்களின் பலனையும் உன் நிலத்தின் பலனையும் உண்டு வருவான். அவன் உன்னை அழித்தொழிக்கு மட்டும் உன் தானியத்தையும், பழச்சாற்றையும் எண்ணெயையும், ஆட்டு மாட்டு மந்தைகளையும் ஒன்றும் மிதியாக விட்டு விடாமல் தின்று தீர்ப்பான்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ கட்டி எழுப்பும் உயரமும் பாதுகாப்புமுள்ள மதில்கள் தரையிலே விழுமட்டும் அந்த இனத்தான் உன் நகரங்களிலே உன் வலிமை குன்ற உன்னை நெருக்கி, உன் வாயில்களுக்கு உட்புறத்திலேயே உன்னை முற்றுகையிடுவான்.
உன் பகைவர்களால் உனக்கு உண்டாகும் வெறுமையும் அவதியும் எவ்வளவென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளித்துள்ள உன் கருவின் கனியான புதல்வர் புதல்வியருடைய இறைச்சியை நீ உண்பாய்.
உங்களிடையே மெல்லியல்பும் இன்பவெறியும் உள்ளவன் தன் சகோதரனுக்கேனும் தன் நெஞ்சுக்குகந்த மனைவிக்கேனும் தன் துன்பத்தினிடையே தான் உண்ணும் தன் பிள்ளையின் இறைச்சியில் கொஞ்சமேனும் கொடுக்கமாட்டான்.
இன்பவெறியும் மெல்லியல்புமுள்ள பெண்ணும் அவ்விதமே செய்வாள். எவள் தன் மிதமிஞ்சின மெல்லியல்பைப்பற்றித் தரையிலே உள்ளங்காலை ஊன்றி நடக்க மாட்டாதிருப்ளோ, அவள் அப்பொழுது தன் நெஞ்சுக்குகந்த கணவனுக்குக்கூடத் தன் புதல்வன் அல்லது புதல்வியுடைய இறைச்சியில் பங்கு கொடுக்க உடன்படாள்.
அன்றியும், உன் பகைவர்கள் முற்றுகையிட்டு உன் வாயில்களுக்குள்ளே உன்னை நெருக்கி எல்லாவற்றையும் அழித்து விடுவதனால், பெண்கள் அந் நேரத்தில் பிறந்த குழந்தையையும் வயிற்றிலிருந்து வெளிவரும் கசுமாலங்களையும் மறைவிலே உண்பார்கள்.
நீ இந்நூலில் எழுதப்பட்டுள்ள எல்லா நீதிச் சட்டங்களையும் கைக்கொண்டு அனுசரிக்காமல், உன் கடவுளாகிய ஆண்டவருடைய மகிமையும் பயங்கரமுமுள்ள திருப்பெயருக்கு அஞ்சாமல் போவாயாகில்,
(அதுவுமின்றி) கணக்கிலே விண்மீன்களைப்போல் இருந்த நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலிக்குச் செவி கொடாமற் போனதினால், கொஞ்ச மக்களாய்க் குறைந்து சிறுத்துப் போவீர்கள்.
முன்னே ஆண்டவர் உங்களுக்கு நன்மை செய்வதிலும் உங்களைப் பெருகச் செய்வதிலும் எப்படி விருப்பம் கொண்டிருந்தாரோ, அப்படியே நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டிலிருந்து பிடுங்கப்படுமட்டும், உங்களைக் கெடுப்பதிலும் அழிப்பதிலும் விருப்பம் கொண்டிருப்பார்.
மண்ணின் ஒருமுனை தொடங்கி மறுமுனை வரையிலுமிருக்கிற எல்லா மக்களுக்குள்ளேயும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கே நீயும் உன் மூதாதையரும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைத் தொழுவாய்.
மனத்தில் குடிகொண்டிருக்கும் அச்ச நடுக்கத்தாலும் உன் கண்கள் காணும் பயங்கரக் காட்சிகளாலும் நீ வெருண்டு, பொழுது விடிய: மாலைவேளை எப்போது வருமோ என்றும், சூரியன் மறைய: பொழுது எப்பொழுது விடியுமோ என்றும் சொல்வாய்.
ஆண்டவர்: நீ ஒருகாலும் காணாதிருப்பாய் என்று எவ்வழியைக் குறித்து உனக்குச் சொன்னாரோ, அவ்வழியாகவே உன்னைக் கப்பல்களில் ஏற்றி எகிப்துக்குக் திரும்பவும் கொண்டு போவார். அங்கே நீங்கள் அடிமைகளாகவும் வேலைக்காரிகளாகவும் உங்கள் பகைவர் கையில் விலைக்கு விற்கப்படுவீர்கள். அப்பொழுதுகூட உங்களை விலைக்கு வாங்க ஒருவரும் இரார் என்றார்.