ஏனேன்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் புகும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நீதிச்சட்டங்கள் யாவையும் மேற்படிக் கற்களில் எழுதக்கடவாய்.
பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய்.
யோர்தனைக் கடந்த பின்பு மக்களுக்கு ஆசீர் அளிக்குமாறு சிமையோன், லேவி, யூதா, இஸாக்கார், சூசை, பெஞ்சமின் கோத்திரத்தார்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள்.
ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.
தன் தந்தையின் மனைவியோடு தகாத உறவு கொள்பவன் அல்லது அவளுடைய படுக்கையின் மேல்மூடியைத் திறப்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.