உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிணம் வெளியிலே கிடக்கக் கண்டு, கொலை செய்தவன் இன்னனென்று தெரியாத விடத்து,
இப்படி அளந்து, எந்த நகரம் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அண்மை என்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப் பெரியோர்கள், நுகத்தடியில் இன்னும் பிணைக்கப்படாததும் கலப்பையால் நிலத்தை உழாததுமான ஒரு கிடாரியை மந்தையிலிருந்து தேர்ந்து கொண்டு,
அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் தமக்குப் பணி புரியவும், தமது பெயரால் ஆசிமொழி சொல்லவும், எல்லா வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் தங்கள் வாக்கினாலே தீர்ப்பிடவும் தாமே தேர்ந்துகொண்ட அந்த லேவி புதல்வராகிய குருக்கள் அவ்விடம் வருவார்கள்.
ஆண்டவரே, நீர் மீட்டுக் காப்பாற்றிய இஸ்ராயேலர் ஆகிய உம் மக்கள்மீது இரக்கமாயிரும். இஸ்ராயேலர் ஆகிய உம்மக்கள் நடுவில் குற்றமில்லா இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று வேண்டக்கடவார்கள். அப்பொழுது இரத்தப் பழி அவர்கள் மீது இராமல் நீங்கிவிடும்.
தான் பிடிபட்டபோது அணிந்திருந்த ஆடையை நீக்கி, உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒருமாதம் வரையிலும் தன் தாய் தந்தையரை நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக்கொண்டபின் அவளை உனக்கு மனைவி ஆக்கிக் கொள்வாய்.
அதன் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த அன்பு அற்றுப்போகுமாயின், அவளைத் தன்னுரிமையோடு போகவிடு. நீ அவளைத் தாழ்வுபடுத்தினபடியால், அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம்; உன் அதிகாரத்தால் அவளைத் துன்புறத்துதலும் ஆகாது.
இரண்டு மனைவிகளையுடையவன் ஒருத்தியின் மேல் விருப்பமாகவும் மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் மூத்த மகனாய் இருப்பானாயின்,
அவன் தனக்குண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில், வெறுக்கப்பட்டவளுடைய புதல்வனுக்கு மூத்த மகனுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்ட மனைவியின் புதல்வனுக்கு அதைக் கண்டிப்பாய்க் கொடுக்கலாகாது.
அவன் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த புதல்வனையே தன் மூத்த மகனாகக்கொண்டு, தன் சொத்துகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்கவேண்டு. உள்ளபடி அவன் தந்தைக்கு முதற்புதல்வனாயிருக்கிறதனால் மூத்த மகனுக்குள்ள உரிமை அவனுக்கே உரியதாம்.
தாய் தந்தையர் சொல்லைக் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான ஒரு பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
எங்கள் மகனாகிய இவன் குறும்பும் அகந்தையுமுள்ளவனாய் எங்கள் அறிவுரைகளைக் கேளாமல் தள்ளிக் கெட்ட நடத்தையுள்ளவனாயிருக்கிறான்; பேருண்டிக்காரனும் குடியனுமாய் இருக்கிறான் என்று சொல்வார்கள்.
அப்பொழுது அவன் சாகும்படி அந்நகரத்தில் வாழ்வோர் எல்லாரும் அவன்மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிவிடவே, இஸ்ராயேலர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
இரவிலே அவன் பிணம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. அதே நாளில் அவனை அடக்கம் செய்யவேண்டும். ஏனென்றால், மரத்திலே தொங்குகிறவன் கடவுளாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கும் நாட்டைத் தீட்டுப்படுத்துதல் கண்டிப்பாய் ஆகாது.