மக்களும் பலியைச் செலுத்த வருபவர்களும் குருக்களுக்குக் கொடுக்க வேண்டிய பகுதி என்னவென்றால்: அவர்கள் பலியிடும் ஆடுமாடுகளின் முன்னந் தொடையையும் இரைப்பையையும் குருவுக்குக் கொடுப்பார்கள்.
ஏனென்றால், அவனும் அவன் புதல்வர்களும் என்றும் ஆண்டவருடைய பெயராலே அவருடைய முன்னிலையில் நின்று இறைபணி செய்யும்படி, அவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவரால் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளேயும் தேர்ந்து கொள்ளப்பட்டார்கள்.
இஸ்ராயேலின் எவ்விடத்திலுமுள்ள உங்கள் நகரங்களுள் யாதொன்றிலே குடியிருந்த ஒரு லேவியன் அவ்வூரை விட்டு, ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு இசைவோடு வருவானாயின்,
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்த பின்பு, அந்த மக்களுடைய வெறுக்கத்தக்க நடத்தைகைளைப் பின்பற்றத் துணியாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
நீ யாருடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இருக்கிறாயோ அவர்கள் சகுனம் பார்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் நம்புகிறவர்கள். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவரால் வேறு விதமான கல்வி கற்றிருக்கிறாய்.
ஓரேபிலே சபைக் கூட்டம் கூடிய நாளில் நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து: நான் சாகாதபடிக்கு என் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று வேண்டிக்கொண்டபோது,
உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரரின் நடுவிலிருந்து தோன்றச் செய்து, நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்போம். நாம் கற்பிப்பதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார்.
ஆனால், நாம் சொல்லும்படி கட்டளையிடாத வார்த்தைகளை நமது பெயராலே எந்தத் தீர்க்கதரியாவது சாதித்துச் சொல்லத்துணிவானாகில் அல்லது வேறு தேவர்களின் பெயராலே பேசுவானாகில் சாகக்கடவான் என்று திருவுளம்பற்றினார்.
இதை அடையாளமாக வைத்துக்கொள். ஒரு தீர்க்கதரிசி ஆண்டவருடைய பெயராலே ஒரு காரியம் சொல்கிறான்; அது நிறைவேறாமல் போனால், அதை ஆண்டவர் சொல்லவில்லை; அந்தத் தீர்க்கதரிசி தன் அகந்தையினாலே அதைத் தானே உண்டாக்கிச் சொன்னான். ஆதலால், அதை நீ (கவனிக்கவும் வேண்டாம்;) அதற்கு அஞ்சவும் வேண்டாம்.