நபுக்கோதனசார் அரசன் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையொன்றைச் செய்வித்து, அதைப் பபிலோன் மாநிலத்திலிருந்த தூரா என்னும் சமவெளியில் நாட்டி வைத்தான்.
எக்காளம், நாகசுரம், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியிலே, நீங்கள் தாழ விழுந்து, நபுக்கோதனசார் அரசன் நிறுத்திய பொற்சிலையைப் பணிதல் வேண்டும்.
ஆகையால், எக்காளம், நாசுகரம் கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடனே, எல்லா மொழியினரும் தாழ விழுந்து மன்னன் நபுக்கோதனசார் நிறுத்திய சிலையைப் பணிந்து தொழுதார்கள்.
அரசே, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழ விழுந்து பொற்சிலையைப் பணிய வேண்டும் என்றொரு கட்டளை பிறப்பித்தீர்;
ஆனால் அரசே, பபிலோன் மாநிலத்தின் காரியங்களைக் கண்காணிக்கும்படி நீர் ஏற்படுத்திய சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்னும் யூதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் உமது கட்டளையை அவமதித்து, உம் தெய்வங்களை வணங்காமல், நீர் நாட்டி வைத்த பொற்சிலையைப் பணியாமலிருக்கிறார்கள்."
அப்போது நபுக்கோதனசார் கடுஞ்சினங் கொண்டு, சித்ராக்கையும் மிசாக்கையும் அப்தேநாகோவையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்; உடனே அவர்கள் அரசன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர்.
நபுக்கோதனசார் அவர்களை நோக்கி, "சித்ராக், மிசாக், அப்தேநாகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்காமலும், நான் நாட்டிய பொற்சிலையைப் பணியாமலும் இருந்தது உண்மை தானா?
இப்போதாவது, எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் போது, நீங்கள் தாழவிழுந்து நான் செய்த சிலையைப் பணியத் தயாராயிருக்கிறீர்களா? பணியா விட்டால் அந்த நொடியிலே எரிகிற தீச்சூளையில் போடப்படுவீர்கள்; உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய கடவுள் யார் இருக்கிறார்?" என்றான்.
அப்போது மன்னன் நபுக்கோதனசாருக்கு கடுஞ்சின மூண்டது; கடுகடுப்பான முகத்தோடு சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களைப் பார்த்தான்; சாதாரணமாய்ச் சூடாக்குவதை விடத் தீச்சூளையை ஏழு மடங்கு மிகுதியாய்ச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.
பின்பு சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்களின் கால்களைக் கட்டி, அவர்களை அந்த எரிகிற சூளையில் போடும்படி தன் படைவீரர்களுள் மிகுந்த உடல் வலிமையுள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.
உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேற்போர்வையோடும் தலைப்பாகையோடும் மிதியடிகளோடும் ஆடைகளோடும் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டி எரிகிற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்.
(91) அரசன் புதுமையை ஏற்றுக் கொள்ளுகிறான்: அப்போது மன்னன் நபுக்கோதனசார் வியப்புற்று விரைந்தெழுந்தான்; தன் அமைச்சர்களை நோக்கி, "மூன்று மனிதர்களையல்லவா கட்டி நெருப்பின் நடுவில் எறிந்தோம்?" என்று வினவினான்; அதற்கு அவர்கள், "ஆம், அரசே" என்று விடை தந்தனர்.
(92) அதற்கு அவன், "கட்டவிழ்க்கப் பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் இதோ, நான்கு பேர் உலாவுகிறதை நான் காண்கிறேனே! அவர்களுக்கோ ஒருவகைத் துன்பமும் நேரவில்லை; மேலும் நான்காம் பேர்வழியின் சாயல் உம்பருலகத்தார் சாயல் போல் இருக்கிறதே!" என்றான்.
(93) அப்போது நபுக்கோதனசார் எரிகிற தீச்சூளையின் வாயிலண்டை வந்து, "உன்னத கடவுளின் ஊழியர்களாகிய சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியோரே, வெளியே வாருங்கள்" என்றான். உடனே சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்கள் தீயின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
(95) ஆலோசனைக்காரர்களும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீயே படாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய மேற்போர்வை தீயாமலும், அவர்களிடத்தில் நெருப்பின் புகை நாற்றம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்:
(95b) அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.
(96) ஆதலால், சித்ராக், மிசாக், அப்தேநாகோ இவர்களின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறுகிற எந்த மக்கள் குலத்தவனும் எந்த இனத்தானும் எந்த மொழியினனும் வாளுக்கு இரையாகி மாண்டு போவான் என்றும், அவனுடைய வீடும் தரையாய் மீட்கும் ஆற்றலுள்ள கடவுள் வேறொருவருமில்லை."