"அக்காலத்தில், உன் இனத்தார்க்குக் காவலராக சேனைத் தலைவரான மிக்கேல் எழும்புவார்; மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்; அக்காலத்தில் உன் இனத்தார் தப்பித்துக் கொள்வர்: யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
அப்போது மெல்லிய பட்டாடை உடுத்தி, ஆற்றின் தண்ணீர் மேல் நின்ற அந்த மனிதர் தம் வலக்கையையும் இடக்கையையும் வானத்துக்கு நேராகத் தூக்கி, "ஒரு காலமும் இரு காலமும் அரைக் காலமும் செல்லும்; பரிசுத்த மக்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டு முடிவுறும் போது இவை யாவும் நிறைவேறும்" என்று என்றென்றும் வாழ்கிறவர் பேரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.
பலர் தேர்ந்து கொள்ளப்பட்டு வெண்மையாக்கப்படுவர்; நெருப்பிலிட்டாற் போல்ப் புடம்போடப்படுவர்; தீயவர்கள் தீய நெறியில் நடப்பார்கள்; அவர்கள் அதை உணரவு மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்வார்கள்