இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: அரசனுக்கென முதல் புல்லறுப்பு செய்தான பின், இரண்டாம் பருவத்தில் புற்கள் தளிர்க்கத் தொடங்கும் போது இதோ, வெட்டுக்கிளிக் கூட்டங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, இறைவனாகிய கடவுள் தாமே பழிவாங்குவதற்காக நெருப்பைத் தருவித்தார்; அது ஆழ்ந்த கடலை வற்றச் செய்து விட்டு, நிலத்தையும் இரையாக்கிக் கொண்டிருந்தது.
ஆமோசே, நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது தூக்கு நூற்குண்டு" என்றேன்; ஆண்டவர் தொடர்ந்து சொன்னார்: "இதோ, தூக்கு நூற்குண்டு நம் மக்களாகிய இஸ்ராயேலின் நடுவில் தொங்க விட்டுப் பரிசோதிக்கப் போகிறோம்; இனி அவர்களை ஒரு போதும் மன்னியோம்;
அப்போது, பேத்தேலின் அர்ச்சகனாகிய அமாசியாஸ் என்பவன் இஸ்ராயேல் அரசனாகிய யெரோபோவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: "இஸ்ராயேல் வீட்டார்களின் நடுவில் ஆமோஸ் உமக்கு எதிராகக் கலகம் விளைவிக்கிறான்; நாடு அவன் சொற்களைப் பொறுக்க இயலாது.
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமாசியாசைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினனுமல்லேன், இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனுமல்லேன்; நான் ஆடுமாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரங்களைக் கண்காணிப்பவன்.
ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'உன் மனைவி நகரத்தில் விலைமகளாய் இருப்பாள், உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவார்கள், உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ தீட்டுள்ள நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ராயேல் தன் நாட்டை விட்டுத் தொலை நாட்டுக்கு அடிமையாய்க் கூட்டிப் போகப்படும்."