Indian Language Bible Word Collections
Amos 3:11
Amos Chapters
Amos 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Amos Chapters
Amos 3 Verses
1
இஸ்ராயேல் மக்களே, உங்களுக்கு எதிராக- எகிப்து நாட்டினின்று நாம் கூட்டிவந்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு எதிராக- ஆண்டவர் உரைத்த இந்த வாக்கைக் கேளுங்கள்:
2
உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத் தான் நாம் அறிந்து கொண்டோம்; ஆதலால் உங்கள் அக்கிரமங்கள் அனைத்திற்காகவும் நாம் உங்களைத் தண்டிப்போம்.
3
தங்களுக்குள் ஏற்கெனவே உடன்படாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
4
இரை அகப்படாமல் இருக்கும் போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? தான் ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையில், குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ?
5
வேடன் தரையில் வலை விரிக்காதிருக்கும் போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே கண்ணியில் படாதிருக்கும் போது வலை தரையை விட்டு மேலெழும்புமோ?
6
நகரத்தில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பாமல், நகரத்துக்குத் தீமை தானாக வருமோ?
7
தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கும் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், ஆண்டவராகிய இறைவன் ஏதும் செய்வதில்லை.
8
சிங்கம் கர்ச்சனை செய்கிறது, அஞ்சி நடுங்காதவன் எவன்? கடவுளாகிய ஆண்டவர் பேசுகிறார், இறைவாக்கு உரைக்காதவன் எவன்?"
9
அசீரியாவின் அரண்மனைகள் மேலும் எகிப்து நாட்டின் அரண்மனைகள் மேலும் நின்று கொண்டு இதை விளம்பரப்படுத்து: "சமாரியாவின் மலைகள் மேல் ஒன்று கூடுங்கள், அதனுள் நடக்கும் பெருங் குழப்பங்களையும் அதில் செய்யப்படும் கொடுமைகளையும் பாருங்கள்."
10
நேர்மையானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை" என்கிறார் ஆண்டவர். "அவர்கள் தங்கள் அரண்மனைகளில் வன்முறைகளையும் கொள்ளையையும் குவிக்கிறார்கள்."
11
ஆகையால் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நாட்டைப் பகைவன் வந்து சூழ்ந்து கொள்வான், உன் அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான், உன் மாளிகைகள் கொள்ளையிடப்படும்."
12
ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ, காதின் ஒரு பகுதியையோ விடுவிப்பது போலவே, சமாரியாவில் பஞ்சணை மீதும் மெல்லிய படுக்கையின் மேலும் அமர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்கள் விடுவிக்கப்படுவார்கள்."
13
இதைக் கேளுங்கள், கேட்டு யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சாட்சியம் சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன், சேனைகளின் கடவுள்.
14
அதாவது: இஸ்ராயேலை அதன் மீறுதல்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பேத்தேலில் உள்ள பீடங்களையும் நாம் தண்டிப்போம்; பலி பீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையிலே வீழும்.
15
குளிர்கால மாளிகை, வேனிற்கால அரண்மனைகளை இடித்திடுவோம், தந்தத்தால் இழைத்த வீடுகள் அழிந்துபோகும், எண்ணிறந்த வீடுகள் பாழாய்ப்போகும்" என்கிறார் ஆண்டவர்.