பிலிப்பு செய்த அருங்குறிகளை மக்கள் கண்டபோது அல்லது அவற்றைக் குறித்துக் கேள்வியுற்றபோது, ஒருமனதாய்த் திரண்டு வந்து, அவர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்டனர்.
ஆனால், பிலிப்பு கடவுளின் அரசைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறித்தும் நற்செய்தி அறிவித்தபோது, ஆண்களும் பெண்களும் அவர் கூறியதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.
அப்பொழுது சீமோனும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றான். பெற்றபின் பிலிப்புவோடு கூடவே இருந்து அவர் செய்த அருங்குறிகளையும் அரிய புதுமைகளையும் கண்டு திகைத்து நின்றான்.
இவ்வாறு ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து, அதற்குச் சான்று பகன்ற பின், அப்போஸ்தலர் யெருசலேமிற்குத் திரும்பினர். வழியில் சமாரியா நாட்டின் பல ஊர்களில் நற்செய்தி அறிவித்தனர்.
ஒருநாள், ஆண்டவரின் தூதர் பிலிப்புவிடம், "யெருசலேமிலிருந்து காசா ஊருக்குப்போகும் சாலை வழியாய்த் தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் செல்" என்றார். இச்சாலை இன்று ஆள் நடமாட்டமற்றது. பிலிப்பு புறப்பட்டுச் சென்றார்.
பிலிப்பு விரைந்து ஓடி, அதை நெருங்கியபோது, அவன் இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படிப்பதைக் கேட்டு, "படிப்பதன் பொருள் உமக்கு விளங்குகிறதா?" என்று வினவினார்.
அப்போது அவன் படித்துக்கொண்டிருந்த மறைநூலின் பகுதி பின்வருமாறு: ' செம்மறிபோலக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்பட்டார். உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத ஆட்டுக்குட்டி போல், அவர் வாய் திறக்கவில்லை.
இருவருமே தண்ணீரை விட்டு வெளியேறினபோது, ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். பின்னர் அண்ணகன் அவரைக் காணவில்லை. மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றான்.