அப்பொழுது இராயப்பர், "அனனியாவே, நிலம் விற்றதில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியை ஏமாற்றும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன் ?
அது உன் பெயரில் இருந்தவரையில் உன்னுடையது தானே; விற்ற பிறகும் தொகை முழுவதும் உனக்கு உரிமையாகத்தான் இருந்ததில்லையா ? பின், இத்தகைய எண்ணம் உன் உள்ளத்தில் உதித்தது எப்படி ? நீ பொய் சொன்னது மனிதரிடமன்று, கடவுளிடமே" என்றார்.
அதற்கு இராயப்பர், "நீங்கள் இருவரும் ஆண்டவரின் ஆவியைச் சோதிக்க ஒன்றுபட்டதேன்? உன் கணவனைப் புதைத்தவர்களின் காலடிகள் கேட்கின்றன; இதோ! கதவருகில் வந்துவிட்டார்கள்; உன்னையும் கொண்டுபோவார்கள்" என்றார்.
என்றவுடனே, அவள் அவருடைய காலருகில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்தபோது, அவள் இறந்துகிடக்கக் கண்டார்கள்; வெளியே கொண்டுபோய் அவளுடைய கணவனுக்கருகில் அவளைப் புதைத்தார்கள்.
எனவே, இராயப்பர் போகும்போது, பிணியாளிகள் சிலர்மீது அவர் நிழலாவது விழும் என்று எதிர்பார்த்து, அவர்களைத் தெருக்களில் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடந்துவார்கள்.
யெருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியால் துன்புற்றவர்களையும் தூக்கிக் கொண்டுவந்து திரளாகக் கூடுவார்கள்; அவர்கள் அனைவரும் குணமடைவர்.
இதைக் கேட்டு, அவர்கள் விடியற்காலையில் கோயிலுக்குப் போய்ப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமைக்குரு தம் ஆட்களுடன் வந்து, இஸ்ராயேலரின் ஆலோசனைக்குழுவையும் தலைமைச்சங்கம் முழுவதையும் கூட்டி, அப்போஸ்தலர்களைக் கொண்டுவர, சிறைச்சாலைக்கு ஆள் அனுப்பினர்.
தலைமைக் குரு அவர்களை நோக்கி, "இப்பெயரைச் சொல்லிப் போதிக்கலாகாது என்று உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா ? ஆயினும், இதோ நீங்கள் யெருசலேம் எங்கும் உங்கள் போதனையைப் பரப்பிவிட்டீர்கள். அதோடு, அந்த மனிதனின் இரத்தப் பழியையும் எங்கள்மேல் சுமத்தப் பார்க்கிறீர்கள்" என்றான்.
அப்பொழுது கமாலியேல் என்னும் பரிசேயர் ஒருவர் சங்கத்தின் நடுவில் எழுந்தார். இவர் மக்கள் எல்லாரிடமும் மதிப்புப் பெற்றிருந்த ஒரு சட்ட வல்லுநர். இவர் அப்போஸ்தலர்களைச் சற்று நேரம் வெளியே அனுப்பக் கட்டளையிட்டு,
ஏனெனில், கொஞ்ச காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் கிளம்பி, தான் ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக்கொண்டு வந்தான். ஏறத்தாழ நானூறு பேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். ஆனால், இறுதியில் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைரும் சிதறிப் போகவே எல்லாம் ஒன்றுமில்லாமல் போயிற்று.
அவனுக்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கு எடுப்புக் காலத்தில் கலிலேயானான யூதாஸ் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டினான். அவனும் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறுண்டனர்.
ஆகவே, நான் சொல்லுவது: இவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காரியத்தில் தலையிட வேண்டாம். ஏனெனில், இவர்கள் திட்டமிட்டிருப்பதும் செய்து வருவதும் மனிதருடைய செயலாயிருந்தால், சிதைந்துபோம்.
கடவுளுடையதாயின், நீங்கள் அவர்களைத் தொலைக்க முடியாது. மேலும், நீங்கள் கடவுளோடு போராடுவோர் ஆகக்கூடும்" என்றார். அவர் சொன்னதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.