இவன் குணம் பெற்று உங்கள்முன் நிற்பது நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால்தான்; இது உங்கள் எல்லோருக்கும், இஸ்ராயேல் மக்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கட்டும். இந்த இயேசுவைத்தாம் நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்; கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார்.
இராயப்பரும் அருளப்பரும் கல்வியறிவு அற்றவர்கள் எனச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களுடைய துணிவைக் கண்டு வியப்புற்றனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதும் தெரியும்.
"இவர்களை என்ன செய்யலாம்? சிறந்ததோர் அருங்குறி இவர்களால் நிகழ்ந்துள்ளது; யெருசலேமில் வாழ்வோர் அனைவருக்கும் அது நன்றாய்த் தெரியும்; அதை நம்மால் மறுக்க முடியாது.
அதற்கு இராயப்பரும் அருளப்பரும் மறுமொழியாக: "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்குமுன் நீதியா, நீங்களே தீர்மானியுங்கள்.
"உள்ளபடியே, இந்நகரில் ஏரோதும் போஞ்சு பிலாத்தும் புறவினத்தாரும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றுபட்டு, நீர் அபிஷுகம்செய்த உம் புனித ஊழியராகிய இயேசுவை எதிர்த்து எழுந்தனர்.
இவ்வாறு மன்றாடவே, அவர்கள் குழுமியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, கடவுளின் வார்த்தையைத் துணிவுடன் எடுத்துச்சொன்னார்கள்.
விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்; அவர்களுள் ஒருவனும் தன் உடைமை எதன்மீதும் உரிமைப்பாராட்டவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
சைப்பாஸ் தீவினரான சூசை என்னும் லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் அவருக்குப் பர்னபா என்று பெயரிட்டார்கள்; ( அதற்கு 'ஆறுதலின் புதல்வன் ' என்பது பொருள் ).