அத்தீவில் வாழ்ந்தவர்கள் எங்களிடம் பரிவுடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராய் இருந்தபடியால், அவர்கள் நெருப்பு மூட்டி எங்களை அருகில் அழைத்துச் சென்றனர்.
அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவின் வாசிகள் கண்டு, "இவன் ஒரு கொலைக்காரனாகதான் இருக்க வேண்டும். கடலுக்குத் தப்பித்துக்கொண்டாலும் தெய்வ நீதி இவனை உயிரோடிருக்க விடவில்லை" எனத் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
அவருக்கு வீக்கம் காணும் அல்லது திடீரென விழுந்து இறந்துவிடுவார் என அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நெடு நேரமாகியும், அவர்கள் எதிர்பார்த்தது போல் அவருக்கு எத்தீங்கும் நேரவில்லை. இதைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றி அவர் ஒரு தெய்வம் எனக் கூறலானார்கள்.
மூன்று மாதங்களுக்குப்பின், அத்தீவில் மாரிக்காலத்தின் போது தங்கியிருந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியா நகரக் கப்பல், "மிதுனம்" என்பது அதன் பெயர்.
அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி ரேகியு துறைமுகம் அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசவே, புறப்பட்டு இரண்டாம் நாள் புத்தெயோலி துறைமுகம் சேர்ந்தோம்.
அங்குள்ள சகோதரர்கள் எங்களைப்பற்றிக் கேள்வியுற்று, அப்பியு சந்தை,' 'மூன்று விடுதி என்னும் இடங்கள் வரையிலும் எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். இவர்களைக் கண்ட சின்னப்பர் கடவுளுக்கு நன்றி கூறி, மனத்திடம் பெற்றார்.
மூன்று நாளுக்குப்பின், சின்னப்பர், யூதப் பெரியோர்களை வரவழைத்தார். அவர்கள் ஒன்றுகூடியபின் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, முன்னோருடைய முறைமைகளுக்கு மாறாகவோ நான் எதுவும் செய்யவில்லை. எனினும் யெருசலேமில் கைதியாக்கப்பட்டு உரோமையருக்குக் கையளிக்கப்பட்டேன்.
ஆனால், யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால் என் வழக்கு செசாருடைய மன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று உரிமை கோர அவசியம் ஏற்பட்டது. எனினும் நான் இப்படிச் செய்தது, என் இனத்தார் மேல் குற்றம் சாட்டவேண்டுமென்றல்ல.
அதற்கு அவர்கள், "உம்மைப்பற்றி யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவில்லை. நீர் தீமை செய்ததாக சகோதரர்களில் யாரும் இங்கே வந்து ஒன்றும் அறிவிக்கவில்லை. அதைப்பற்றியப் பேச்சும் எழவில்லை.
இக்கட்சியைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பது மக்கள் இதை எங்கும் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்பதே. இதைப்பற்றி உம்முடைய கருத்தை நீரே எடுத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.
அதற்காக ஒருநாளைக் குறித்தனர். அன்று யூதர் பலர் அவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து குழுமினர். மோயீசனுடைய சட்டத்திலிருந்தும் இறைவாக்குகளிலிருந்தும் சான்றுகள் பல எடுத்துக்காட்டி, கடவுளின் அரசைப் பற்றி வலியுறுத்திப் பேசி, இயேசுவைச் சார்ந்தவற்றை அவர்கள் ஏற்கச் செய்ய முயன்றார். காலை முதல் மாலை வரை இப்படி உரையாடினார்.
இவ்வாறு தங்களிடையே கருத்து வேறுபட்டவர்களாய் கலைந்து போகையில், சின்னப்பர் அவர்களை நோக்கி, "இன்னும் ஒரு வார்த்தை, கேளுங்கள்; இறைவனாக்கினரான இசையாஸ் வாயிலாக, பரிசுத்த ஆவி உங்கள் முன்னோருக்குக் கூறியது பொருத்தமே.
(30) தம்மைக் காண வந்தோரை உபசரித்து, மிக்கத் துணிவோடு, தடையெதுவுமின்றி அவர்களுக்குக் கடவுளின் அரசைப்பற்றிய செய்தியை அறிவித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைப் போதித்து வந்தார்.