அப்போஸ்தலர்கள் இருவரும் அங்கே பல நாள் தங்கி, ஆண்டவரை நம்பி, துணிவுடன் பேசினர். ஆண்டவரும் தம் கருணையை வெளிப்படுத்தும் இப்போதனையை உறுதிப்படுத்த அவர்கள் கையால் அருங்குறிகளும் அற்புதங்களும் நிகழச் செய்தார்.
"நண்பர்களே, என்ன செய்கிறீர்கள்? நாங்களும், உங்களைப்போல எளிய நிலைக்குட்பட்ட மனிதர்கள்தானே. இப்பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள் பக்கம் திரும்ப வேண்டுமென்று நற்செய்தியை அறிவிக்கிறோம். விண், மண், கடல் யாவற்றையும் அவற்றிலடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் அவரே.
ஆயினும், தம்மை அறிந்துகொள்ள எத்தகைய சான்றும் இல்லாதபடி விட்டுவிடவில்லை. எவ்வாறெனில், வானினின்று உங்களுக்கு மழையைப் பொழிந்து, செழிப்புமிக்கப் பருவங்களை அளித்து, உங்கள் உள்ளம் மகிழ்ச்சி பொங்க, நிறைய உணவு கொடுத்து உங்களுக்கு நன்மை புரிந்துவந்தார்" என்றனர்.
அப்போது அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களை ஏவி, சின்னப்பரைக் கல்லாலெறிந்தார்கள். அவர் இறந்துவிட்டதாக எண்ணி நகருக்கு வெளியே இழுத்துப் போட்டார்கள்.
அங்கே வந்து சேர்ந்ததும், சபையைக் கூட்டிக் கடவுள் தங்களுக்காக அரிய பெரிய செயல்களைப் புரிந்ததையும், புறவினத்தாருக்கு விசுவாச வாயிலைத் திறந்துவிட்டதையும் எடுத்துரைத்தனர்.