"நான் யோப்பா நகரில் செபித்துக்கொண்டிருந்தபொழுது பரவசமாகிக் காட்சி கண்டேன். கப்பல் பாயைப்போன்ற ஒரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி வானத்தினின்று இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
ஆகவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட நமக்கு அருளிய அதே திருக்கொடையைக் கடவுள் அவர்களுக்கும் அருளினார் என்றால், கடவுளுக்குத் தடைசெய்ய என்னால் எப்படி முடியும்?"
முடியப்பர் பற்றிய கலாபனையால் விசுவாசிகள் பெனிக்கியா, சைப்ரஸ், அந்தியோகியா வரைக்கும் சிதறுண்டு போயினர். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே அன்றி வேறு யாருக்கும் தேவ வார்த்தையை அறிவிக்கவில்லை.
ஆனால், இப்படிப் போனவர்களுள் சைப்ரஸ்தீவினர், சீரேனே ஊரார் சிலர் அந்தியோகியாவிற்கு வந்து கிரேக்கர்களை அணுகி, அவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தனர்.
அங்குப்போய் கடவுளின் அருளைக்கண்டு மனமகிழ்ந்தார். மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்து நிற்க அனைவரையும் ஊக்குவித்தார். திரளான மக்கள் ஆண்டவர் பக்கம் சேர்ந்தனர்.
இருவரும் அச்சபையோடு ஓராண்டு முழுவதும் உறவாடினர்; அங்கே பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் தான் முதன்முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
அவர்களுள் ஒருவர் அகபு என்பவர். அவர் ஆவியினால் ஏவப்பட்டு, உலகெங்கும் பெரும் பஞ்சம் உண்டாகுமென முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசன் காலத்தில் உண்டாயிற்று.