அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,
இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
யன்னேயும் யம்பிரேயும் மோயீசனை எதிர்த்து நின்றதுபோல் மேற்சொன்னவர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். சீரழிந்த மதிகொண்டவர்கள் இவர்கள். விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் பயனற்றவர்கள்.
அந்தியோக்கியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் நான் துன்புறுத்தப்பட்டபோது என் பாடுகளிலும் என்னைப் பின்பற்றினீர். எத்தனையோ துன்பங்களுக்கு உள்ளானேன். ஆனால் ஆண்டவர் அவை அனைத்தினின்றும் என்னை விடுவித்தார்.
குழந்தைப் பருவமுதலே உமக்கு மறைநூல் தெரியும் என்பதை நீர் மறவாதீர். மறைநூல் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மீட்பிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஞானத்தை அளிக்க வல்லது.