சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்ற ஒருவன் இருந்தான். அரசர் அவனைத் தம்மிடம் வரச் சொல்லி அவனை நோக்கி, "சீபா நீ தானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அடியேன் தான்" என்றான்.
அப்போது அரசர், "கடவுளின் பொருட்டு நான் சவுலின் குடும்பத்தாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேன். அவருடைய வீட்டாரில் யாரேனும் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?" என்று வினவினார். சீபா அரசரை நோக்கி, "ஆம், யோனத்தாசுக்குப் பிறந்து இரு கால்களும் முடமான ஒருவன் இருக்கிறான்" என்றான்.
சவுலின் மகனான யோனத்தாசின் மகன் மிபிபோசேத் தாவீதிடம் வந்த போது முகங்குப்புற விழுந்து அவரை வணங்கினான். அப்பொழுது தாவீது, "மிபிபோசேத்" என்று கூப்பிட, அவன், "அடியேன் இருக்கிறேன்" என்றான்.
தாவீது அவனை நோக்கி, "அஞ்சாதே, உன் தந்தை யோனத்தாசை முன்னிட்டு நான் உனக்குக் கட்டாயம் இரக்கம் காட்டுவேன். உன் பாட்டனாகிய சவுலின் நிலங்களை எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும், நீ என் பந்தியில் நாளும் உணவு அருந்துவாய்" என்றார்.
ஆகையால் நீயும் உன் புதல்வர்களும் உன் ஊழியர்களும் நிலத்தைப் பயிரிடுங்கள்; அதனால் உன் தலைவரின் மகன் உண்ண உணவு கிடைக்கும். உன் தலைவரின் மகன் மிபிபோசேத் நாளும் என் பந்தியில் உணவு அருந்துவான்" என்றார். சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்ததார்கள்.