இஸ்ராயேலின் முதியவர்களும் எபிரோனில் இருந்த அரசரிடம் வந்தார்கள். தாவீது அரசர் எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன் படிக்கை செய்து கொண்ட பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள்.
அரசரும் அவருடன் இருந்த மனிதர் அனைவரும் எழுந்து நாட்டில் குடியிருந்த எபிசேயர் மேல் போரிடுவதற்கு யெருசலேமுக்குப் போனார்கள். எபிசேயர் தாவீதிடம், "நீர் குருடர்களையும் முடவர்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் இங்கு உம்மால் நுழைய முடியாது" என்று கூறித் தாவீது நகருள் நுழைவதைத் தடுத்தனர்.
அது தாவீதின் நகராயிற்று. குழாய்க் கால்வாய் வழியாகக் கோட்டையின் மேல் ஏறி எபிசேயரையும் தாவீதை வெறுக்கும் முடவர்களையும் குருடர்களையும் அப்புறப்படுத்துபவனுக்குப் பரிசு கொடுப்பதாகத் தாவீது கூறியிருந்தார். இதன் பொருட்டே, 'குருடனும் முடவனும் ஆலயத்தில் வரக்கூடாது' என்று பழமொழி வழங்கலாயிற்று.
அதனால் ஆண்டவர் இஸ்ராயேலின் அரசராகத் தம்மை உறுதிப்படுத்தினார் என்றும், ஆண்டவருடைய மக்களாகிய இஸ்ராயேல் மேல் தம் அரசை அவரே நிறுவினார் என்றும் தாவீது தெளிவாய்க் கண்டு பிடித்தார்.
தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள் என்று அறிந்தபோது, பிலிஸ்தியர் எல்லாருமே அவரைத் தேடி வந்தார்கள். அதைக் கேள்வியுற்ற தாவீது கோட்டைக்குள் போய்விட்டார்.
அப்போது தாவீது ஆண்டவர் திருமுன் வந்து, "நான் பிலிஸ்தியரோடு போருக்குப் போகலாமா? என் கையில் அவர்களை நீர் ஒப்படைப்பீரா?" என்று கேட்க, ஆண்டவர், "போகலாம், பிலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்போம்" என்று மறுமொழி சொன்னார்.
அவ்வாறே தாவீது பாவால்- பாரசீமுக்கு வந்து அங்கே அவர்களை முறியடித்தார். அப்போழுது அவர், "தண்ணீர் சிதறுண்டு போவது போல் ஆண்டவர் என் எதிரிகளை எனக்கு முன்பாகச் சிதறடித்தார்" என்றார். எனவே, பாவால்- பாரசீம் என்று அவ்விடம் அழைக்கப் பெற்றது.
பிலிஸ்தியருடன் நான் போருக்குப் போகலாமா? நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா? என்று கேட்டதற்கு ஆண்டவர், "நீ அவர்களை முன்னிருந்து எதிர்க்க வேண்டாம். மாறாக அவர்களுக்குப் பின்னால் சுற்றிப்போய்ப் பீர் மரங்களுக்கு எதிரே வந்த பின் அவர்களைப் பின் தொடர்வாய்.
மேலும் பீர் மரங்களின் உச்சியில் மனிதர் நடந்து வரும் சத்தத்தை நீ கேட்கும் போது போரைத் தொடங்கு. ஏனெனில் அந்நேரத்தில் பிலிஸ்தியரின் பாசறையை முறியடிக்கும்படி ஆண்டவர் உனக்கு முன்பாகப் போயிருப்பார்" என்றார்.