Indian Language Bible Word Collections
2 Samuel 22:13
2 Samuel Chapters
2 Samuel 22 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
2 Samuel Chapters
2 Samuel 22 Verses
1
ஆண்டவர் தாவீதைச் சவுலின் கைக்கும், அவருடைய எல்லா எதிரிகளின் கைக்கும் தப்புவித்தபின் தாவீது ஆண்டவருக்குப் பண் இசைத்த பாடலாவது:
2
ஆண்டவரே என் பாறையும் என் வலிமையும் என் மீட்பரும் ஆவார்.
3
கடவுளே வல்லவர்; அவரையே நான் நம்பியிருக்கிறேன். என் கேடயமும் என் மீட்பின் அணிகலனும் என் புகழும் என் தஞ்சமும் அவரே. என் மீட்பரே பாவத்திலிருந்து என்னை மீட்டருளும்.
4
ஆண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர்; அவரை நோக்கிக் கூப்பிடுவேன். அதனால் என் எதிரிகளிடமிருந்து காக்கப் பெறுவேன்.
5
ஏனெனில் மரண பயங்கரம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பெலியாலின் வெள்ளங்கள் என்னை அச்சுறுத்தின.
6
பாதாளத்தின் கயிறுகள் என்னைச் சுற்றி வளைத்தன. மரணக் கண்ணிகள் என் மேலே விழுந்தன.
7
என் இக்கட்டு வேளையில் ஆண்டவரைக் கூவியழைப்பேன். என் கடவுளை நோக்கி அபயமிடுவேன். அவர் தமது ஆலயத்தினின்று என் கூக்குரலைக் கேட்பார். என் அழுகுரல் அவருடைய செவிகளில் ஏறும்.
8
பூமி அதிர்ந்து நடுங்கினது. அவர் கோபம் கொண்டபடியால் மலைகளின் அடித்தளங்களே நடுங்கிக் குலுங்கின.
9
அவருடைய நாசிகளினின்று புகை கிளம்பியது. அவருடைய வாயினின்று தீ புறப்பட்டது. அதனால் கரிகளும் தீப்பற்றிக் கொண்டன.
10
அவர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார். அவருடைய பாதங்களின் கீழ் காரிருள் படர்ந்திருந்தது.
11
அவர் கெருபீம் மேல் ஏறிப் பறந்தார். காற்றின் இறக்கைளின் மேல் தாவிப் போய் விட்டார்.
12
இருளால் தம்மைச் சுற்றிலும் மறைத்தார். வான மேகங்களினின்று மழை பொழியச் செய்தார்.
13
அவர் திருமுன் ஒளியினால் கரிகளும் பற்றி எரிந்தன.
14
ஆண்டவர் வானினின்று இடிமுழங்கச் செய்வார். உன்னதமானவர் தம் குரல் தொனிக்கச் செய்வார்.
15
அவர் அம்புகளை எய்து அவர்களைச் சிதறடித்தார். மின்னல்களைப் பயன்படுத்தி அவர்களை அழித்து விட்டார்.
16
ஆண்டவர் அதட்டிக் கண்டித்ததினாலும், அவர் தமது கோபமூச்சை வீசினதினாலும் கடலின் பாதாளங்களும் தென்பட்டன; பூமியின் அடித்தளங்களும் காணப்பட்டன.
17
அவர் உயர்த்திலிருந்து பாய்ந்து வந்து என்னைத் தூக்கி வெள்ளப் பெருக்கினின்று மீட்டார்.
18
அவர் வல்லமைமிக்க என் எதிரிகளிடமிருந்தும், என்னிலும் வலிமை வாய்ந்தவராய் இருந்ததால் என்னைப் பகைத்தவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றினார்.
19
என் துயர நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார். ஆண்டவரே என் ஊன்றுகோல்.
20
பரந்த இடத்திற்கு என்னைக் கொணர்ந்தார். நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார்.
21
ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல் எனக்குப் பிரதிபலன் அளிப்பார். என் கைகளின் தூய்மைக்கு ஏற்றது போல் எனக்குக் கைம்மாறு அளிப்பார்.
22
ஏனெனில் நான் ஆண்டவருடைய வழி நின்று ஒழுகினேனே அன்றி, கடவுளை விட்டு விலகி தீச் செயல் ஒன்றும் புரியவில்லை.
23
அவருடைய தீர்ப்புகள் எல்லாம் என் கண்முன் இருக்கின்றன. அவருடைய சட்டங்களை மீறி நடந்தேனில்லை.
24
அவரோடு நான் நிறைவுள்ளவனாய் இருப்பேன். என் தீச் செயல்களினின்றும் என்னைச் காத்துக் கொள்வேன்.
25
ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல், தம் கண்முன் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறு எனக்குக் கைம்மாறு அளிப்பார்.
26
நீர் தூயோருக்குத் தூயோராயும், வலியோர்க்கு நிறைவுள்ளவராயும் இருப்பீர்.
27
தேர்ந்து கொள்ளப்பட்டவருள் தேர்ந்து கொள்ளப்பட்டவராய் இருப்பீர்.
28
நீர் எளியோரை மீட்டீர். செருக்குற்றோரை உம் கண்களில் சிறுமைப்படுத்தினீர்.
29
ஆண்டவராகிய நீரே என் ஒளி விளக்கு.
30
நீரே என் இருளை ஒளிரச் செய்கிறீர். ஏனெனில் உம் பெயரால் நான் ஓடத் தயாராய் இருக்கிறேன். என் இறைவன் துணையால் நான் மதிலையும் தாண்டுவேன்.
31
இறைவனுடைய வழி மாசற்றது. ஆண்டவருடைய வார்த்தை புடமிடப்பட்டது. தம்மேல் நம்பிக்கை கொள்வோர் அனைவர்க்கும் அவர் கேடயமாய் இருக்கின்றார்.
32
ஆண்டவர் அன்றி வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர வல்லபமுள்ளவர் யார்?
33
அவரன்றோ என்னையும் திடப்படுத்தினார், என் வழியையும் செவ்வைப்படுத்தினார்?
34
அவரன்றோ என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்கினார், உயர்ந்த இடங்களில் என்னை நிறுத்தி வைத்தார்?
35
அவரன்றோ என் கைகளைப் போருக்குப் பழக்குகின்றார், என் புயங்களையும் வெண்கல வில்லைப்போல் ஆக்குகின்றார்?
36
உம்முடைய மீட்பின் கேடயத்தை எனக்குத் தந்தீர். உமது கருணையே என்னைத் தழைத்தோங்கச் செய்தது.
37
என் காலடிகளை விரிவுபடுத்துவீர். நான் இடறி விழாதபடி என் கால்களை உறுதிப்படுத்துவீர்.
38
என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து அவர்களை நசுக்குவேன். அவர்களை அழித்தொழிக்காமல் நான் திரும்பி வரமாட்டேன்.
39
எழ முடியாதபடி அவர்களை நொறுக்கி அழித்துப் போடுவேன். அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.
40
ஆற்றல் அளித்து நீர் என்னைப் போருக்கு ஆயத்தமாக்கினீர். என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
41
என் எதிரிகளை எனக்குப் புறமுதுகு காட்டி ஓடச் செய்தீர். என் பகைவர்களை நான் அழித்து விடுவேன்.
42
அவர்கள் கூக்குரலிடுவார்கள்; ஆயினும் அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இரார். ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவார்கள்; அவரோ அவர்களுக்குச் செவி கொடார்.
43
பூமியின் புழுதியைப் போல் அவர்களைச் சிதறடிப்பேன். தெருக்களின் சேற்றைப்போல் அவர்களை மிதித்து அழிப்பேன்.
44
என் மக்களின் போராட்டங்களினின்று என்னை விடுவித்துப் புறவினத்தாருக்கு என்னைத் தலைவனாக ஏற்படுத்துவீர். நான் அறியாத மக்களே எனக்கு அடிபணிவார்கள்.
45
அன்னியர் என்னை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் அவர்கள் என் குரலைக் காதால் கேட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிவார்கள்.
46
அன்னியர் மடிந்து போனார்கள்; தங்கள் இடுக்கண்களில் அவர்கள் நெருக்கப்படுவார்கள்.
47
ஆண்டவர் உயிருள்ளவர்; என் கடவுள் புகழப்படுவாராக! என் மீட்பராம் வலிமை மிக்க கடவுள் உயர்த்தப் பெறுவாராக!
48
எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிற கடவுள், மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகின்ற கடவுள் நீரே!
49
என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும், என்னை எதிர்க்கிறவர்களின்மேல் என்னை உயர்த்துகிறவரும், தீயோரிடமிருந்து என்னை மீட்கிறவரும் நீரே!
50
அதன் பொருட்டு, என் ஆண்டவரே, புறவினத்தார் மத்தியில் உம்மைப் புகழ்ந்தேத்தி உமது யெருக்குப் பண் இசைப்பேன்.
51
அவரே அரசனின் மீட்பை மிகுதிப்படுத்தி, தாம் அபிஷுகம் செய்த தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றும் இரக்கம் காட்டுவாராக!"