மறு ஆண்டு அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்த போது, தாவீது யோவாபையும் அவரோடு தம் வீரரையும் இஸ்ராயேலர் அனைவரையும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரை அழித்தொழிந்து, ரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.
அன்றொரு நாள் தாவீது நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில், அவருக்கு எதிரே தம் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். அப்பெண் மிகவும் அழகாக இருந்தாள்.
அப்போது தாவீது யோவாபிடம் ஆள் அனுப்பி "ஏத்தையனான உரியாசை என்னிடம் அனுப்பிவை" என்று சொன்னார். அப்படியே யோவாப் ஏத்தையனான உரியாசைத் தாவீதிடம் அனுப்பி வைத்தான்.
பிறகு தாவீது உரியாசை நோக்கி, "உன் இல்லத்திற்குப் போய் உன் கால்களைக் கழுவு" என்றார். உரியாசு அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, அரச உணவு அவனுக்குப் பின்னால் அனுப்பப் பட்டது.
உரியாசு தன் இல்லத்திற்குச் செல்லவில்லை என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாசை நோக்கி, "நீ பயணத்திலிருந்து வந்தவனல்லவா? நீ உன் வீட்டுக்குப் போகாதது ஏன்?" என்று கேட்டார்.
உரியாசு தாவீதைப் பார்த்து, "கடவுள் பேழையும் இஸ்ராயேலும் யூதாவும் கூடாரங்களில் இருக்க, என் தலைவன் யோவாபும் என் அரசரின் சேவகரும் வெளியே தங்கியிருக்க, நான் உண்ணவும் குடிக்கவும், என் மனைவியுடன் படுக்கவும் என் வீட்டிற்குள் போவேனோ? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்" என்றான்.
அப்போது தாவீது உரியாசை நோக்கி, "இன்றும் நீ இங்கேயே இரு; நாளை நான் உன்னை அனுப்பி வைப்பேன்" என்றார். அப்படியே உரியாசு அன்றும் மறுநாளும் யெருசலேமில் தங்கி இருந்தான்.
தாவீது அவனைத் தன் முன்னிலையில் உண்ணவும் குடிக்கவும் அழைத்து அவனுக்குப் போதை ஊட்டினார். ஆயினும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் மாலையிலேயே வெளியே போய் அரசரின் சேவகரோடு தன் படுக்கையில் தூங்கினான்.
ஒரு வேளை அவர் சினந்து, 'நீங்கள் நகர மதில்களுக்கு அண்மையில் நின்று போரிட்டது ஏன்? எதிரிகள் நகர மதில்கள் மேலிருந்து ஈட்டியை எறிவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதோ?
யெரோபாவின் மகன் அபிமெலேக்கைக் கொன்றவன் யார்? தேபெசு நகர முற்றுகையின் போது ஒரு பெண் நகர மதிலின் மேலிருந்து எந்திரக் கல்லின் ஒரு துண்டை அவன் மேல் எறிந்ததாலன்றோ அவன் மடிந்தான்? நீங்கள் நகர மதில் அருகே சென்றது ஏன்?' என்று அரசன் உன்னிடம் சொன்னால், நீ அவரைப் பார்த்து, 'உம்முடைய ஊழியனும் ஏத்தையனுமான உரியாசும் மடிந்தான்' என்று சொல்" என்றான்.
வில் வீரர் நகர மதில் மேலிருந்து உம் ஊரியர்களின் மேல் அம்பு எய்ததால் அரசரின் சேவகரில் பலர் வீழ்ந்ததோடு உம் ஊழியனாகிய ஏத்தையன் உரியாசும் மாண்டான்" என்றான்.
அப்பொழுது தாவீது தூதனை நோக்கி, "நீ யோவாபிடம் சொன்று: 'இது குறித்து நீர் கலங்கவேண்டாம். போரின் போக்கு பலவிதம். வாள் ஒருமுறை ஒருவனையும், மற்றொரு முறை வேறொருவனையும் இரையாக்கிவிடும். நீர் உம் வீரர்களைத் தேற்றி நகரை விரைவில் பிடித்துத் தகர்க்க அவர்களைத் தூண்டும்' என்று சொல்" என்றார்.
இழவு நாள் முடிந்தவுடன் தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன் வீட்டிற்குக் கொணர்ந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீதின் இச் செயலோ ஆண்டவருக்கு மனவருத்தம் அளித்தது.