யூதா அரசன் ஒக்கோசியாசின் மகன் யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டில், ஏகுவின் மகன் யோவக்காசு சமாரியாவில் இஸ்ராயேலைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
அவன் ஆண்டவர் திருமுன் தீயவற்றைச் செய்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழி நின்று, அவற்றை விட்டு விலகாது நடந்து வந்தான்.
ஆனால் யோவக்காசு ஆண்டவரை இரந்து மன்றாடவே, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். சீரியாவின் அரசன் இஸ்ராயேலருக்கு இழைத்த துன்பத்தால் அவர்கள் மிகவும் அவதிப்படுவதைக் கண்டு, ஆண்டவர் மனம் இரங்கினார்.
ஆயினும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் வீட்டாருடைய பாவங்களை விட்டு விலகாது, அவன் காட்டிய வழியிலேயே நடந்து வந்தனர். சமாரியாவில் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) தோப்பும் அழிக்கப்படவில்லை.
யோவக்காசுக்கு அவன் குடிகளில் ஐம்பது குதிரை வீரரும் பத்துத் தேர்களும் பதினாயிரம் காலாட் படையினருமே மீதியாயிருந்தனர். ஏனெனில் சீரியா நாட்டு அரசன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்தின் தூசி போல் ஆக்கியிருந்தான்.
யோவாசின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவனது வீரமும், யூதா அரசன் அமாசியாசோடு அவன் போரிட்ட விதமும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்டபின், அவனுடைய மகன் எரோபோவாம் அவனது அரியணையில் ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ராயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.
நிற்க, எலிசேயுவுக்கு இறுதி நோய் வந்துற்றது. அப்போது, இஸ்ராயேல் அரசன் யோவாசு அவரிடம் சென்று, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ராயேலின் தேரே! அதன் சாரதியே!" என்று அவருக்கு முன்பாக நின்று கதறி அழுதான்.
எலிசேயு அப்போது அரசனை நோக்கி, "உமது கையை இந்த வில்லின் மேல் வையும்" என்றார். அவன் தன் கையை வில்லின் மேல் வைக்க எலிசேயு தம் கைகளை அரசனின் கைகளின் மேல் வைத்து,
மறுபடியும், "அம்புகளைக் கையில் எடும்" என்றார். அவற்றை அவன் எடுக்கவே, மறுபடியும் எலிசேயு "தரையில் அம்பை எய்யும்" என்றார். அவன் மூன்று முறை எய்து விட்டு நின்றான்.
ஆண்டவரின் மனிதர் அவன் மேல் கோபம் கொண்டவராய், "நீர் ஐந்து, ஆறு முறை எய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் சீரியரை முற்றும் கொன்றழித்திருப்பீர். இப்போதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பீர்" என்றார்.
அப்போது ஒரு மனிதனைப் புதைக்கச் சென்று கொண்டிருந்த சில இஸ்ராயேலர் அக்கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டு, பிணத்தை எலிசேயுவின் கல்லறையிலே போட்டனர். அப்பிணம் எலிசேயுவின் எலும்புகளின் மேல் பட்டவுடனே அம்மனிதன் உயிர்த்து எழுந்தான்.
ஆண்டவர் அவர்கள் மேல் மனம் இரங்கி ஆபிரகாம், ஈசாக், யாக்கோப் என்பாரோடு தான் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை நினைவு கூர்ந்தார். ஆதலால் அவர் இன்று வரை அவர்களை அழிக்கவும் இல்லை, அவர்களை முற்றும் தள்ளிவிடவும் இல்லை.
யோவக்காசின் மகன் யோவாசு அசாயேலோடு போரிட்டு, தன் தந்தை யோவக்காசின் கையினின்று அவன் பிடித்திருந்த நகர்களை எல்லாம் அவனுடைய மகன் பெனாதாதின் கையினின்று திரும்பக் கைப்பற்றி, அவனை மூன்று முறையும் முறியடித்தான். ஆதலால் பெனாதாத் இஸ்ரயேலின் நகர்களை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது.