அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான். ஆண்டவர் இஸ்ராயேல் புதல்வருக்கு முன்பாக அழித்துப் போட்டிருந்த புறவினத்தாரின் அருவருப்புக்குரிய பழக்க வழக்கங்களின்படி அவன் நடந்து, ஆண்டவர் திருமுன் தீயன புரிந்தான்.
ஏனெனில் அவன் தன் தந்தை எசெக்கியாஸ் தகர்த்துப் போட்டிருந்த மேடைகளைத் திரும்பவும் கட்டினான்; பாவால்களுக்குப் பலிபீடங்களையும் சிலைத்தோப்புகளையும் உண்டாக்கி, விண்ணகப் படையையெல்லாம் பணிந்து தொழுதான்.
ஆண்டவர், "நமது திருப்பெயர் யெருசலேமில் என்றென்றும் விளங்கும்" என்று சொல்லிக் குறித்திருந்த அதே கடவுளின் ஆலயத்திலே மனாசே அந்நிய தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டத் துணிந்தான்.
அதுவுமன்றி அவன் பெனன்னோம் என்ற பள்ளத்தாக்கிலே தன் புதல்வரை தீ மிதிக்கச் செய்தான். சகுனம் பார்த்துக் குறிகேட்டுப் பில்லி சூனியங்களை அனுசரித்து வந்தான். மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக் காரருக்கும் புகலிடம் கொடுத்து வந்தான். இவ்வாறு ஆண்டவர் திருமுன் தீயன பல புரிந்து அவருக்குக் கோபம் வருவித்தான்.
தாவீதையும் அவர் மகன் சாலமோனையும் பார்த்து, "இந்த ஆலயத்திலும், இஸ்ராயேல் குலத்தாரிலெல்லாம் நாம் தேர்ந்து கொண்ட யெருசலேமிலும் நமது திருப்பெயர் விளங்கச் செய்வோம்;
மோயீசன் மூலமாய் நாம் இஸ்ராயேலுக்குக் கொடுத்துள்ள எல்லாத் திருச்சட்டங்களுக்கும் சடங்கு முறைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப இஸ்ராயேல் மக்கள் கவனமாய் ஒழுகிவந்தால், நாம் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்ற மாட்டோம்" என்று சொல்லி முன்பு குறித்திருந்த கடவுளின் ஆலயத்திலேயே, மனாசே செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் அமைக்கத் துணிந்தான்.
மனாசேயால் தீய வழியிலே நடத்தப்பெற்ற யூதா நாட்டவரும் யெருசலேமின் குடிகளும், முன்னாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அழித்துப் போட்டிருந்த புறவினத்தாரை விட அதிகம் கெட்டுப் போனார்கள்.
மேன் மேலும் அவன் ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடினதால் ஆண்டவர் அவனுக்கு மனமிரங்கி அவனுடைய நாட்டிற்கும் யெருசலேமிற்கும் அவனைத் திரும்பக் கொணர்ந்தார். அப்பொழுது ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.
பின்பு அவன் தாவீதின் நகருக்கு வெளியே ஒரு மதிலைக் கட்டினான். அது சீயோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கிலே மீன் வாயில் தொடங்கி ஒப்பேல் வரை மிகவும் உயரமாகக் கட்டப்பட்டது. அதுவுமன்றி மனாசே அரணான எல்லா நகர்களிலும் படைத்தலைவர்களை நியமித்தான்.
ஆண்டவரின் ஆலயத்திலிருந்த அந்நிய தெய்வங்களையும் சிலைகளையும், ஆண்டவரின் ஆலயத்து மலை மேலும் யெருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றி நகருக்கு வெளியே எறிந்தான்.
மனாசேயின் மற்ற வரலாறு, அவன் தன் கடவுளை நோக்கிச் செய்த மன்றாட்டும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரது திருப்பெயரால் அவனோடு பேசின திருக்காட்சியாளர்களின் வாக்குகளும் இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
மேலும் அவன் கடவுளை நோக்கிச் செய்த மன்றாட்டும், அவனுக்கு ஆண்டவர் காட்டின இரக்கமும், அவன் செய்த எல்லாப் பாவங்களும், அவன் கடவுளை இகழ்ந்து புறக்கணித்த விதமும், தவம் பண்ணினதற்கு முன் அவன் மேடைகளைக் கட்டித் தோப்புகளையும் சிலைகளையும் ஏற்படுத்தின இடங்களும் ஓசேயில் நூலில் இடம் பெற்றுள்ளன.
தன் தந்தை மனாசே போன்றே அவனும் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து வந்தான். மனாசே செய்து வைத்திருந்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு அவற்றை வழிபட்டு வந்தான்.