ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிமடுத்து விசுவாசத்தை மறுத்து விடுவர்.
அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சிலர் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிக் கூறித் தூய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார் ?
இக்கருத்துக்களையெல்லாம் சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டினால் நீர் இயேசு கிறிஸ்துவின் நல்ல ஊழியராய் இருப்பீர். விசுவாசக் கோட்பாடுகளிலும், நற்போதனையிலும் பயிற்சி பெற்றவராயும் விளங்குவீர்.
உடற்பயிற்சி ஓரளவு தான் பயன் தரும். பக்தியோ அளவில்லாப் பயன் தரும். ஏனெனில், இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு பெறுவோம். என்னும் உறுதிப்பாடு பக்தியில் அடங்கியுள்ளது.
நீர் இளைஞராயிருப்பதால் உம்மை யாரும் அவமதியாதிருக்கட்டும். சொல், நடத்தை, அன்பு, விசுவாசம், தூய்மை முதலியவற்றில் நீர் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
உம் வாழ்க்கை முறைப்பற்றியும் போதனைபற்றியும் விழிப்பாயிரும். இவற்றில் நிலையாயிரும். இவ்வாறு நடந்தால் நீர் மீட்படைவீர். உமக்குச் செவிசாய்ப்பவர்களையும் மீட்படையச் செய்வீர்.