'எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை ' என்று மக்கள் கூறும்போதே, கர்ப்பவதிகளுக்கு வேதனை ஏற்படுவதைப்போல் திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
பகலைச் சார்ந்த நாமோ மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்பின் நம்பிக்கையைத் தலைச்சீராகவும் அணிந்து கொள்வோமாக.
சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.
சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களை முற்றும் பரிசுத்தராக்குவாராக. அவ்வாறே உங்கள் ஆவி, ஆன்மா, உடல் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது சீர்குலையாமல் குற்றமின்றி இருக்கும்படி காக்கப்படுவதாக.