சவுல் தனக்கு இட்ட அலுவல்கள் அனைத்தையும் தாவீது விவேகமுடன் செய்து வந்தான். எனவே சவுல் அவனைப் போர் வீரர்களுக்குத் தலைவனாக்கினார். எல்லா மக்களும் சிறப்பாகச் சவுலுடைய ஊழியர்களும் தாவீதைப் பெரிதும் விரும்பினர்.
தாவீது பிலிஸ்தியனை வென்று திரும்பி வருகையில் இஸ்ராயேலின் எல்லா நகரங்களிலுமிருந்தும் பெண்கள் கஞ்சிராக்களுடனும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சியாய் ஆடிப்பாடிச் சவுல் அரசரை எதிர்கொண்டு வந்தார்கள்.
அது கேட்ட சவுல் மிகுந்த எரிச்சல் அடைந்தார். ஏனெனில் அது அவர் மனத்துக்குப் பிடிக்கவில்லை. அவர்கள், தாவீதுக்குப் பதினாயிரமும் எமக்கு ஆயிரமும் கொடுத்தார்களே; இன்னும் ஆட்சியை விட அவனுக்கு என்ன குறைவாய் இருக்கிறது?" என்று அவர் சொன்னார்.
மறுநாள் ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடித்துக் கொண்டது. அவர் தம் வீட்டிற்குள்ளே அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். தாவீது நாள்தோறும் செய்வது போலத் தன் கையால் யாழை மீட்டிக் கொண்டிருந்தான்.
சவுல் ஈட்டியைக் கையில் எடுத்து, தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த எண்ணி ஈட்டியை அவன் மேல் எறிந்தார். தாவீதோ இருமுறையும் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டான்.
ஒருநாள் சவுல் தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேரோபை உனக்கு மண முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் மாவீரனாய் இருந்து ஆண்டவருடைய போர்களை நடத்து" என்றார். "என் கை அவன் மேல் படாமல், பிலிஸ்தியர் கையே அவன் மேல் விழட்டும்" என்று சவுல் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். ஏனெனில் அவள் அவனுக்கு இடையூறாய் இருப்பாள். பிலிஸ்தியர் கையும் அவன் மேல் விழும் என்று சவுல் சொன்னார். மேலும் அவனைப் பார்த்து, "நீ இரண்டு காரியங்களை முன்னிட்டு இன்று எனக்கு மருமகனாய் இருப்பாய்" என்றார்.
பிறகு சவுல் தம் ஊழியக்காரரை நோக்கி, "நீங்கள் தாவீதோடு இரகசியமாய்ப் பேசி, 'அரசர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஊழியர் எல்லாம் உன்மேல் அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ அரசனுக்கு மருமகனாய் இரு' என்று சொல்லுங்கள்" என்றார்.
அவ்விதமே அவர்கள் இச்சொற்களை எல்லாம் தாவீதிடம் கூறினார்கள். அதற்குத் தாவீது, "அரசனின் மருமகனாய் இருப்பது உங்களுக்கு அற்பமென்று தோன்றுகின்றதா? நானோ எளியவனும் தாழ்ந்த நிலையில் உள்ளவனுமாய் இருக்கிறேனே" என்றான்.
அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் அவனைப் பார்த்து, 'அரசருக்குப் பரிசம் அவசியமில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கிப் பிலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டு வந்தால் போதும்' என்று சொல்லுங்கள்" என்றார். ஏனெனில் தாவீதை பிலிஸ்தியரின் கையில் ஒப்படைக்கச் சவுல் எண்ணியிருந்தார்.
சில நாட்களுக்குப் பின் தாவீது எழுந்து தனக்குக் கீழிருந்த மனிதர்களோடு போய்ப் பிலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்று அவர்களுடைய நுனித்தோல்களைக் கொண்டு வந்து அரசரின் மருமகனாகும் பொருட்டு அவற்றை அவர்முன் எண்ணி வைத்தான். ஆகையால் சவுல் தம் மகள் மிக்கோலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தார்.
பிலிஸ்தியரின் தலைவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்டது முதல் தாவீது சவுலின் ஊழியர்களை விட விவேகமாய் நடந்து கொண்டான். அவனுடைய பெயர் மிகப் புகழடைந்தது.