மிகுந்த பரிவாரத்தோடும், நறுமணப் பொருட்களையும் மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமந்து வந்த ஒட்டகங்களோடும் யெருசலேமை அடைந்தாள். அவள் சாலமோனிடம் வந்து தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவரிடம் உரையாடினாள்.
சாலமோன் அவள் கேட்டவற்றை எல்லாம் அவளுக்கு விளக்கிக் கூறினார். அவள் கேட்டவற்றுள் ஒன்றாகிலும் மன்னருக்குப் புதிராக இருக்கவில்லை; அனைத்திற்கும் தக்க பதில் கொடுத்தார்.
அவர் ஊழியரின் வீடுகளையும், அவர் அலுவலரின் ஊர்களையும், அவர்களின் ஆடைகளையும், குடிகலம் பரிமாறுபவரையும், அவரால் தேவாலயத்தில் செலுத்தப் பெற்று வந்த தகனப்பலிகளையும் கண்ட போது, வியப்பில் ஆழ்ந்தாள்.
நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவில்லை. இப்பொழுதோ நான் கண்டவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என அறிந்துகொண்டேன். உம் ஞானமும் சாதனைகளும் நான் கேள்விப்பட்டதை விட மேலானவையாய் இருக்கின்றன.
உம்மீது பிரியம் கொண்டு உம்மை இஸ்ராயேல் அரியணையில் ஏற்றிய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஆண்டவர் இஸ்ராயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டதினால் அன்றோ, நீதி செலுத்துவதற்கு உம்மை மன்னராக ஏற்படுத்தினார்!" என்றாள்.
அவள் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பென்னையும் மிகுந்த நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சாபாவின் அரசி சாலமோனுக்குக் கொடுத்த அத்துணை நறுமணப் பொருட்கள் அதன் பிறகு யெருசலேமுக்கு வந்ததே கிடையாது.
அவ்வருமையான மரங்களால் அரசர் கோயிலுக்கும் அரண்மனைக்கும் கிராதிகளும், பாடகருக்கு இசைக் கருவிகளும் யாழ்களும் செய்தார். அப்படிப்பட்ட மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, எவனும் கண்டதுமில்லை.
சாலமோன் அரசர் தாமே சாபாவின் அரசிக்கு அரச மகிமைக்குத் தக்க வெகுமதிகளைக் கொடுத்ததோடு, அவள் விரும்பிக் கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார். பிறகு அவள் தன் ஊழியர்களுடன் தன் நாடு திரும்பினாள்.
மேலும் முந்நூறு சிறிய கேடயங்களைச் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு மீனா என்ற நாணயப் பொன் செலவானது. அவற்றை மன்னர் லீபானின் வனம் என்ற மாளிகையில் வைத்தார்.
அவ்வரியணைக்கு ஆறுபடிகள் இருந்தன. அரியணையின் மேற்பாகம் பின்னால் வளைவாய் இருந்தது. உட்காருமிடத்திற்கு இருபுறமும் கைபிடிகள் இருந்தன. இரு சிங்கங்கள் அவற்றின் அருகே நின்றன.
சாலமோன் அரசருக்கு இருந்த பான பாத்திரங்கள் எல்லாம் பொன்னாலும், லீபானின் வனம் என்ற மாளிகையின் தட்டுமுட்டுப் பொருட்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் செய்யப்பட்டிருந்தன. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை. சாலமோனின் காலத்தில் வெள்ளி விலையுயர்ந்த ஒரு பொருளாய் எண்ணப்படவுமில்லை.
ஏனெனில் அரசரின் கப்பல்கள் ஈராமின் கப்பல்களோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தார்சுக்குப் பயணமாகி அவ்விடமிருந்து பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டுவரும்.
சாலமோன் தேர்களையும் குதிரை வீரரையும் ஒன்று திரட்டினார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அத்தேர்களிலும் குதிரை வீரர்களிலும் சிலரைத் தம்மோடு வைத்துக்கொண்டு மற்றவரை அரணிக்கப் பெற்ற நகர்களுக்கு அனுப்பி வைத்தார்.
எகிப்திலிருந்தும் கோவாவிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. எப்படியெனில், அரசரின் வியாபாரிகள் அவற்றைக் கோவாவில் விலைக்கு வாங்கிக் குறித்த விலைக்கு அரசரிடம் விற்று விடுவார்கள்.