Indian Language Bible Word Collections
1 Chronicles 6:81
1 Chronicles Chapters
1 Chronicles 6 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
1 Chronicles Chapters
1 Chronicles 6 Verses
1
லேவியின் புதல்வர்கள் கெர்சோன், காத், மெராரி ஆகியோர்.
2
காத்தின் புதல்வர் பெயர்கள் அம்ராம், இசா, எபுரோன், ஒசியேல் ஆகும்.
3
அம்ராமின் புதல்வர்கள் ஆரோன், மோயீசன், மரியாம் என்பவர்கள். ஆரோனின் புதல்வர்கள் நாதாப், ஆபியு, எலியெசார், ஈத்தமார் என்பவர்கள்.
4
எலியெசார் பினேசைப் பெற்றார்; பினேசு அபிசுவேயைப் பெற்றார்.
5
அபிசுவே பொக்சியைப் பெற்றார். பொக்சி ஓசியைப் பெற்றார்.
6
ஓசி சரையாசைப் பெற்றார்; சரையாசு மெரையோத்தைப் பெற்றார்.
7
மெரையோத் அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
8
அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் அக்கிமாசைப் பெற்றார்.
9
அக்கிமாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோகனானைப் பெற்றார்.
10
யோகனான் அசாரியாசைப் பெற்றார்; சாலமோன் யெருசலேமில் கட்டியிருந்த ஆலயத்தில் குருத்துவப்பணி புரிந்தவர் இவரே.
11
அசாரியாசு அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
12
அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் செல்லுமைப் பெற்றார்.
13
செல்லும் எல்கியாசைப் பெற்றார்; எல்கியாசு அசாரியாசைப் பெற்றார்.
14
அசாரியாசு சரையாசைப் பெற்றார்; சரையாசு யொசெதேக்கைப் பெற்றார்.
15
ஆண்டவர் நபுக்கொதனசாரின் மூலம் யூதா மக்களையும் யெருசலேம் நகரத்தாரையும் நாடு கடத்திக் கொண்டு போன போது யொசெதேக்கும் சிறைப்படுத்தப்பட்டார்.
16
லேவியின் புதல்வர் கெர்சோன், காத், மெராரி என்பவர்களே.
17
கெர்சோனின் புதல்வர்களின் பெயர்கள் லொப்னி, செமேயி என்பவை.
18
காத்தின் புதல்வர்கள் அம்ராம், இசார், எபுரோன், ஒசியேல் என்பவர்கள்.
19
மெராரியின் புதல்வர்கள் மொகோலியும் மூசியுமாம். அவரவர் குடும்பத்தின்படி லேவியரின் தலைமுறை அட்டவணையாவது:
20
கெர்சோன், இவருடைய மகன் லொப்னி; லொப்னியின் மகன் யாகாத்; இவருடைய மகன் பெயர் சம்மா;
21
சம்மாவின் மகன் பெயர் யோவா; இவருடைய மகன் பெயர் அத்தோ; அத்தோவின் மகன் பெயர் ஜாரா; இவருடைய மகன் பெயர் எத்ராய்.
22
காத்தின் புதல்வர்களாவர்: காத்தின் மகன் அமினதாப்; இவருடைய மகன் பெயர் கோரே; இவருடைய மகன் பெயர் அசீர்;
23
அசீரின் மகன் பெயர் எல்கானா; எல்கானாவின் மகன் பெயர் அபிசாப்; அபிசாப்பின் மகன் பெயர் அசீர்.
24
இவருடைய மகன் பெயர் ஒசியாசு; ஒசியாசின் மகன் பெயர் சவுல்.
25
எல்கானாவின் புதல்வர் பெயர் வருமாறு: அமசாயி, அக்கிமோத், எல்கானா.
26
எல்கானாவின் புதல்வர்களாவர்: எல்கானாவின் மகன் பெயர் சொபாயி; இவருடைய மகன் பெயர் நாகாத்.
27
நாகாத்தின் மகன் பெயர் எலியாப்; இவருடைய மகன் பெயர் எரோகாம்; இவருடைய மகன் பெயர் எல்கானா.
28
சாமுவேலின் புதல்வர்களுள் மூத்தவர் பெயர் வசேனி; மற்றவர் பெயர் அபியா.
29
மெராரியின் புதல்வர்கள்: மொகோலி; இவருக்குப் பிறந்த மகன் பெயர் லொப்னி; இவருடைய மகன் பெயர் செமேயி; இவருடைய மகன் பெயர் ஓசா;
30
இவருடைய மகன் பெயர் சம்மா; இவருடைய மகன் பெயர் அக்சியா; இவருடைய மகன் பெயர் அசாயா.
31
திருப்பேழை ஆண்டவரின் ஆலயத்தில் நிறுவப்பட்ட போது ஆலயப்பாடல்களுக்குப் பொறுப்பாளராய் இவர்களையே தாவீது ஏற்படுத்தினார்.
32
சாலமோன் யெருசலேமில் ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை இவர்கள் சாட்சியக் கூடார வாயிலில் பாடிப் பணிபுரிந்து வந்தனர். அப்பணியைத் தத்தம் பிரிவுப்படி செய்து வந்தனர்.
33
தங்கள் மக்களோடு வேலை செய்தவர்கள்: காத்தின் மக்களில் எமான் என்ற இசைஞர் இருந்தார். இவர் யொவேலின் மகன்; இவர் சாமுவேலின் மகன்;
34
இவர் எல்கானாவின் மகன்; இவர் எரொகாமின் மகன்; இவர் எலியேலின் மகன்; இவர் தோகுவின் மகன்;
35
இவர் சூப்பின் மகன்; இவர் எல்கானாவின் மகன்; இவர் மகாத்தியின் மகன்; இவர் அமாசாவின் மகன்;
36
இவர் எல்கானாவின் மகன்; இவர் யொவேலின் மகன்; இவர் அசாரியாசின் மகன்; இவர் சொப்போனியாசின் மகன்;
37
இவர் தாகாத்தின் மகன்; இவர் அசீரின் மகன்; இவர் அபியசாப்பின் மகன்; இவர் கோரேயின் மகன்;
38
இவர் இசாரின் மகன்; இவர் காத்தின் மகன்; இவர் லேவியின் மகன்; இவர் இஸ்ராயேலின் மகன்;
39
அவருடைய சகோதரரான ஆசாப், அவரது வலப்பக்கத்தில் நிற்பார். ஆசாப் பாரக்கியாசின் மகன்; இவர் சம்மாவின் மகன்;
40
இவர் மிக்காயேலின் மகன்; இவர் பசையாசின் மகன்; இவர் மெல்கியாசின் மகன்;
41
இவர் அத்தனாயின் மகன்; இவர் சாராவின் மகன்; இவர் அதாயியாவின் மகன்;
42
இவர் எத்தானின் மகன்; இவர் சம்மாவின் மகன்; இவர் செமேயியின் மகன்;
43
இவர் ஏத்தின் மகன்; இவர் கெர்சோனின் மகன்; இவர் லேவியின் மகன்.
44
மெராரியின் புதல்வர்களான இவர்களுடைய சகோதரர்கள் இடப்பக்கத்தில் நிற்பார்கள். மெராரியின் புதல்வர்கள் வருமாறு: எத்தான், இவர் கூசியின் மகன்; இவர் ஆப்தியின் மகன்;
45
இவர் மலேக்கின் மகன்; இவர் அசபியாசின் மகன்; இவர் அமாசியாசின் மகன்;
46
இவர் எல்கியாசின் மகன்; இவர் அமாசாயின் மகன்; இவர் போனியின் மகன்; இவர் சொமேரின் மகன்;
47
இவர் மொகோலியின் மகன்; இவர் மூசியின் மகன்; இவர் மெராரியின் மகன்; இவர் லேவியின் மகன்;
48
அவர்களின் சகோதரரான லேவியர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த கூடாரத்தின் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
49
ஆண்டவரின் அடியாரான மோயீசன் கற்பித்திருந்த எல்லா வழிமுறைகளின்படியும், ஆரோனும் அவருடைய புதல்வர்களும் தகனப் பலி பீடத்தின் மேல் பலியிட்டு, தூபப்பீடத்தின் மேல் தூபம் காட்டி, உள் தூயகத்திலே எல்லாப் பணி விடைகளையும் செய்து, இஸ்ராயேல் மக்களுக்காக மன்றாடி வந்தார்கள்.
50
ஆரோன் குலத்தில் தோன்றியவர்கள்: அவருடைய மகன் எலியெசார்; இவருடைய மகன் பினேசு; இவருடைய மகன் அபிசுவே;
51
இவருடைய மகன் பொக்கி; இவருடைய மகன் ஓசி; இவருடைய மகன் சராகியா;
52
இவருடைய மகன் மெராயியொத்; இவருடைய மகன் அமாரியாசு; இவருடைய மகன் அக்கித்தோப்;
53
இவருடைய மகன் சாதோக்; இவருடைய மகன் அக்கிமாசு.
54
அவர்கள் பாளையமிறங்கின இடங்களின் படியே அவரவர் எல்லைகளுக்குள் வாழ்ந்து வந்தனர்.
55
சீட்டு விழுந்தபடி யூதா நாட்டு எபிரோனும் அதைச் சுற்றியிருந்த பேட்டைகளும் காத்திய வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டன.
56
ஆனால் அந்நகரத்து வயல்களும் அதைச் சேர்ந்த சிற்றூர்களும் எப்போனேயின் மகன் காலேபுக்கே கொடுக்கப்பட்டன.
57
ஆரோனின் புதல்வருக்கோ அடைக்கல நகர்களாகிய எபிரோனும், லொப்னாவும், அதன் பேட்டைகளும்,
58
ஏத்தேரும் எஸ்தேமோவும், இவற்றின் பேட்டைகளும், எலோனும் தபீரும், அவற்றையடுத்த பேட்டைகளும்,
59
அசானும், பெத்ரெமேசும், அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
60
இவை தவிர, பென்யமீன் குலத்திற்குச் சொந்தமான காபேயையும் அதன் பேட்டைகளையும், அல்மாத்தாவையும் அதன் பேட்டைகளையும், அனத்தோத்தையும் அதன் பேட்டைகளையும் அவர்கள் பெற்றனர். ஆக பதின்மூன்று நகர்கள் அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
61
மற்றக் காத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து நகர்களைச் சொந்தமாய்க் கொடுத்தனர்.
62
கெர்சோனின் புதல்வருக்கோ, அவர்களுடைய குடும்பங்களின் கணக்கிற்கேற்ப இசாக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திருத்திலும் நெப்தலி கோத்திரத்திலும் பாசானிலே மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று நகர்கள் கொடுக்கப்பட்டன.
63
மெராரி புதல்வருக்கோ, அவாகளுடைய குடும்பங்களின் கணக்குக்கேற்ப ரூபன் கோத்திரத்தினின்றும் காத் கோத்திரத்தினின்றும் சபுலோன் கோத்திரத்தினின்றும் பன்னிரு நகர்களைச் சீட்டுப்போட்டுக் கொடுத்தனர்.
64
இவ்வாறு இஸ்ராயேலர் மேற்சொல்லிய நகர்களையும், அவற்றின் பேட்டைகளையும் லேவியருக்குக் கொடுத்தனர்.
65
அவர்கள் சீட்டுப்போட்டு யூதா கோத்திரத்திலும் சிமையோன் கோத்திரத்திலும் பென்யமீன் கோத்திரத்திலுமிருந்து முன் கூறப்பட்ட நகர்களைக் கொடுத்தனர்; அவற்றிற்குத் தத்தம் பெயரையே இட்டான்.
66
காத்தின் சந்ததியாருள் சிலர் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
67
ஆகையால் அடைக்கல நகர்களாகிய எப்பிராயீம் மலைநாட்டுச் சிக்கேமையும் அதன் பேட்டைகளையும், காசேரையும் அதன் பேட்டைகளையும்,
68
எக்மானையும் அதன் பேட்டைகளையும், பெத்தொரோனையும்,
69
எலோனையும் அதன் பேட்டைகளையும், கெத்ரேமோனையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
70
காத்தின் வம்சத்திலே இன்னும் எஞ்சியிருந்த குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த ஆனேரும் அதன் பேட்டைகளும், பாலாமும் அதன் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
71
கெர்சோமின் மக்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த கவுலோனையும் அதன் பேட்டைகளையும், அஸ்தரோத்தையும் அதன் பேட்டைகளையும்,
72
இசாக்கார் கோத்திரத்திற்குச் சொந்தமாய் இருந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், தபரேத்தையும் அதன் பேட்டைகளையும்,
73
இராமோத்தையும் அதன் பேட்டைகளையும், ஆநேமையும் அதன் பேட்டைகளையும்,
74
ஆசேர் கோத்திரத்திலேயுள்ள மாசாலையும் அதன் பேட்டைகளையும்,
75
ஆப்தோனையும், குக்காக்கையும் ரோகோபையும் இவற்றையடுத்த பேட்டைகளையும்,
76
நெப்தலி கோத்திரத்திற்குச் சொந்தனான, கலிலேய நாட்டைச் சேர்ந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், ஆமோனையும் கரியாத்தியாரீமையும் இவற்றையடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்கள்.
77
எஞ்சியிருந்த மெராரியின் மக்களுக்கு சாபுலோன் கோத்திரத்திற்குச் சொந்தமான ரெம்மோன்னோவும் அதன் பேட்டைகளும், தாபோரும் அதன் பேட்டைகளும்,
78
எரிக்கோவிற்கு அருகே யோர்தானுக்கு அக்கரையில் கிழக்கேயிருந்த ரூபனின் கோத்திரத்துப் பாலைவனத்திலுள்ள போசோரும் அதன் பேட்டைகளும்,
79
யாஸ்ஸாவும் அதன் பேட்டைகளும், காதேமோத்தும் அதன் பேட்டைகளும், மேப்பாத்தும் அதன் பேட்டைகளும்,
80
காத்தின் கோத்திரத்திலிருந்த கலாது நாட்டு இராமோத்தும் அதன் பேட்டைகளும், மனாயீமும் அதன் பேட்டைகளும்,
81
எசெபோனும் ஏசேரும் அவற்றின் பேட்டைகளும் கிடைத்தன.