யாபேசு தம் சகோதரரை விட அதிகப் புகழ் பெற்றவராய் விளங்கினார். அவருடைய தாய், "நான் துக்கத்தோடு அவனைப் பெற்றேன்" என்று சொல்லி அவருக்கு யாபேசு என்று பெயரிட்டிருந்தாள்.
யாபேசு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி, "நீர் என்னை இன்மொழி கூறி ஆசீர்வதித்தருளும்; என் நிலங்களின் எல்லைகளையும் விரிவுபடுத்தியருளும். உமது அருட்கரம் என்னோடு என்றும் இருக்கட்டும்; தீமை என்னை மேற்கொள்ளாதவாறு காத்தருளும்" என்று வேண்டிக்கொண்டார். அவர் கேட்டதைக் கடவுள் அருளினார்.
இவர் எஸ்தோனைப் பெற்றார். எஸ்தோன் பெத்திராபாவையும் பெசேயையும், நாவாஸ் நகரத்துக்குத் தந்தையாகிய தெகின்னாவையும் பெற்றார். இவர்களே ரெக்கா என்ற ஊரில் வாழும் மனிதர்கள்.
மவொநதி ஒப்ராவைப் பெற்றார். சராயியா தொழிலாளி பள்ளத்தாக்கு என அழைக்கப்பெறும் இடத்தின் தலைவரான யோவாபைப் பெற்றார். ஏனெனில் அவ்விடத்தில் தொழிலாளர்கள் குடியிருந்தனர்.
இவ்வரலாறுகள் மிகவும் பழமையானவை. இப்போது அவர்கள் நெதாயிம், கெதெரா என்ற இடங்களில் குயவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். அரசனின் வேலையைக் கவனித்து வரும் பொருட்டு அவர்கள், அங்கே குடியேறினர்.
செமேயிக்குப் பதினேழு புதல்வரும், ஆறு புதல்வியரும் இருந்தனர். அவருடைய சகோதரர்களுக்கோ பிள்ளைகள் ஒரு சிலரே. அவர்களின் சந்ததி யூதாவின் புதல்வரைப் போலப் பெருகவில்லை.
அவற்றை அடுத்துப் பாகால் வரை இருந்த எல்லாச் சிற்றூர்களும் அவர்களுடையனவே. இவ்விடங்களில் தான் அவர்கள் வாழ்ந்து வாந்தார்கள். அவர்களுக்குரிய தலைமுறை அட்டவணையும் இருந்தது.
மேலே சொல்லப்பட்டவர்களோ யூதாவின் அரசர் எசேக்கியாசின் காலத்தில் அங்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்த மெயீனியரைக் கொன்று போட்டனர்; அவர்களுடைய கூடாரங்களை அழித்து இந்நாள் வரை அவர்களுள் எவரும் அங்கிராதவாறு அவர்களை ஒழித்து விட்டனர். தங்கள் ஆடுகளுக்குத் தேவையான மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இருந்தமையால் அவர்கள் அங்கேயே குடியேறினார்கள்.
சிமேயோனின் புதல்வராகிய இவர்களில் ஐந்நூறு வீரர் ஏசியின் புதல்வர் பல்தியாஸ், நாரியாஸ், ரப்பையாஸ், ஓசியேல் என்பவர்களைத் தலைவர்களாக கொண்டு, செயீர் மலைக்குச் சென்றனர்.