Indian Language Bible Word Collections
1 Chronicles 2:13
1 Chronicles Chapters
1 Chronicles 2 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
1 Chronicles Chapters
1 Chronicles 2 Verses
1
இஸ்ராயேலின் புதல்வர்கள்: ரூபன், சிமெயோன், லேவி, யூதா, இசாக்கார், சபுலோன்,
2
தாண், யோசேப், பென்யமீன், நெப்தலி, காத், ஆசேர் என்பவர்களாம்.
3
யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா ஆகிய மூவரும் சூயேயின் மகளாகிய கானானியப் பெண்ணிடம் அவருக்குப் பிறந்தனர். யூதாவின் மூத்த மகன் ஏர் ஆண்டவர் திருமுன் தீயவழியில் நடந்து வந்தார்; எனவே அவரைக் கொன்று போட்டார்.
4
தம் மருமகளாகிய தாமார் மூலம் யூதாவுக்கு பாரேஸ், ஜாரா என்பவர்கள் பிறந்தனர். ஆகவே யூதாவுக்கு மொத்தம் ஐந்து புதல்வர்.
5
பாரேசுக்கு எசுரோன், ஆமூல் என்ற இரு புதல்வர் பிறந்தனர்.
6
ஜாராவின் புதல்வர்: ஜம்ரி, எத்தான், ஏமான், கல்கால், தாரா என்ற ஐவர்.
7
கார்மியின் மகன் அக்கார் சாபத்துக்குரியவற்றைத் திருடிப் பாவம் புரிந்து இஸ்ராயேலில் குழப்பம் உண்டு பண்ணினார்.
8
எத்தானுடைய மகன் பெயர் அசாரியாசு.
9
எஸ்ரோனுக்கு எரமெயேல், இராம், கலுபி என்பவர்கள் பிறந்தனர்.
10
இராம் அமினதாபைப் பெற்றார். அமினதாப் யூதாவின் புதல்வருக்குத் தலைவரான நகசோனைப் பெற்றார்.
11
நகசோன் சல்மாவைப் பெற்றார். இவரிடமிருந்து போவாசு பிறந்தார்.
12
போவாசோ ஒபேதைப் பெற்றார். இவரோ இசாயியைப் பெற்றார்.
13
இசாயியோ தலைமகனாக எலியாபையும், இரண்டாவதாக அபினதாபையும், மூன்றாவதாக சிம்மாவையும்,
14
நான்காவதாக நத்தானியேலையும், ஐந்தாவதாக இரதையும்,
15
ஆறாவதாக அசோமையும், ஏழாவதாக தாவீதையும் பெற்றார்.
16
சார்வியா, அபிகாயில் என்பவர்கள் இவர்களுடைய சகோதரிகள். சார்வியாளுக்கு அபிசாயி, யோவாப், அசாயேல் என்ற மூன்று புதல்வர்கள்.
17
அபிகாயிலோ அமாசாவைப் பெற்றாள். இஸ்மாயேல் குலத்தைச் சார்ந்த ஏதரே இவருடைய தந்தை.
18
எஸ்ரோனின் மகன் காலேபோ அசுபாளை மணந்து எரியோத்தைப் பெற்றார். பிறகு அவருக்கு யாசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள் பிறந்தனர்.
19
அசூபா இறந்தபின், காலேப் எப்பிராத்தை மணமுடித்தார். அவளிடம் அவருக்குக் கூர் பிறந்தார்.
20
கூர் ஊரியைப் பெற்றார். ஊரியோ பெசெலெயேலைப் பெற்றார்.
21
பிறகு எஸ்ரோன் கலாதின் தந்தை மக்கீரின் மகளை மண முடித்தார். அப்போது அவருக்கு வயது அறுபது. அவள் அவருக்குச் சேகுபைப் பெற்றாள். சேகுப் ஐயீரைப் பெற்றார்.
22
அப்பொழுது கலாத் நாட்டிலே இருபத்து மூன்று நகர்களைச் சொந்தமாக்கிக் கொண்டார்.
23
கெசூர், ஆராம் என்போர் ஐயீரின் நகர்களையும், கனாத்தையும், அதைச் சேர்ந்த அறுபது நகர்களையும், இவற்றிற்கடுத்த ஊர்களையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் கலாதின் தந்தை மக்கீரின் புதல்வர்கள்.
24
எஸ்ரோன் இறந்த பிறகு காலேப் தம் தந்தையின் மனைவியாகிய எப்பிராத்தாளோடு மண உறவு கொண்டார். இவள் அவருக்குத் தேக்குவாயின் தந்தையாகிய அசூரைப் பெற்றாள்.
25
எஸ்ரோனுடைய மூத்த மகன் பெயர் எரமெயேல். இவருடைய தலைமகன் பெயர் இராம். பிறகு புனா, ஆராம், அசாம், அக்கியா ஆகியோர் பிறந்தனர்.
26
எரமெயேல் அத்தாரா என்பவளையும் மணமுடித்தார்.
27
இவளே ஓனாமின் தாய். எரமெயேலின் தலைமகன் இராமுடைய புதல்வர்களின் பெயர்கள்: மொவோசு, யாமீன், ஆக்கார் என்பவனாம்.
28
ஓனாம் என்பவருக்கு செமேயி, யாதா, ஆகியோர் பிறந்தனர். செமேயியின் புதல்வரோ நதாப், அபிசூர் என்பவர்கள்.
29
அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில். இவள் அவருக்கு அகோபாளையும் மொலிதையும் பெற்றாள்.
30
நதாபின் புதல்வர் சலேத், அப்பைம் என்பவர்கள். சலேத்துக்கு மரணம் வரை மகப்பேறு இல்லை. அப்பைமின் மகன் பெயர் ஏசி.
31
இந்த ஏசி செசானைப் பெற்றார். செசானோ ஓகோலைப் பெற்றார்.
32
செமேயியுடைய சகோதரரான யாதாவின் புதல்வர் ஏத்தேர், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றனர். ஏத்தேரும் மகப்பேறின்றி இறந்தார்.
33
யோனத்தானோ பலேத்தையும் சீசாவையும் பெற்றார். இவர்கள் எரமெயேலின் புதல்வர்களாம்.
34
சேசானுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வரில்லை. ஆனால் ஏரா என்ற பெயருள்ள எகிப்திய அடிமை ஒருவன் இருந்தான்.
35
சேசான் இவனுக்குத் தம் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
36
இவள் ஏத்தையைப் பெற்றாள். ஏத்தேயோ நாத்தானைப் பெற்றார். நாத்தான் சாபாதைப் பெற்றார்.
37
சாபாத் ஒப்லாலைப் பெற்றார். ஒப்வால் ஒபேதைப் பெற்றார்.
38
ஒபேத் ஏகுவைப் பெற்றார். ஏகு அசாரியாசைப் பெற்றார்.
39
அசாரியாசு எல்லேசைப் பெற்றார். எல்லேசு எலாசாவைப் பெற்றார்.
40
எலாசா சிசமோயைப் பெற்றார். சிசமோய் செல்லுமைப் பெற்றார்.
41
செல்லும் இக்காமியாமைப் பெற்றார். இக்காமியாம் எலிசாமைப் பெற்றார்.
42
எரமெயேலுடைய சகோதரராகிய காலேபுடைய சந்ததியார்: சிப்பின் தந்தை மேசா என்னும் தலைமகனும்,
43
எபிரோனின் தந்தை மரேசாவின் புதல்வருமே. எபிரோனின் புதல்வர் பெயர்: கோரே, தப்புவா, ரேக்கேம், சம்மா என்பனவாம்.
44
சம்மாவோ யெர்க்காமுடைய தந்தை இரகாமைப் பெற்றார். ரேக்கேம் சம்மாயியைப் பெற்றார்.
45
சம்மாயியின் மகன் பெயர் மாவோன்; மாவோனோ பெத்சூரின் தந்தை.
46
காலேபுடைய வைப்பாட்டி எப்பா ஆரான், மோசா, கெசேசு என்பவர்களைப் பெற்றாள்.
47
ஆரான் கெசேசைப் பெற்றார். யகத்தாயியின் புதல்வர்கள் பெயர்: ரேகோம், யோவத்தான், கெசான், பாலெத், எப்பா, சாப் என்பன.
48
காலேபுடைய வைப்பாட்டி மாக்கா சாபேரையும், தாரனாவையும் பெற்றாள்.
49
அவளே மத்மேனாவின் தந்தையாகிய சாப்பையும் மக்பேனாவிற்கும் காப்பாவிற்கும் தந்தையான சுவேயையும் பெற்றாள். காலேபின் மகள் பெயர் அக்சா.
50
எப்பிராத்தா என்பவளின் தலைமகன் கூரின் புதல்வரோ: காரியாத்தியாரிமுடைய தந்தை சோபால்,
51
பெத்லெகேமின் தந்தை சல்மா, பெத்கதேரின் தந்தை ஆரிப் ஆகியவர்களாம்.
52
காரியாத்தியாரிமின் தந்தை சோபாலுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஆரோவேயும், மெனுகோத் சந்ததியில் பாதிப்பேருமே அவர்கள்.
53
எத்திரேயரும் அபுத்தேயரும் கெமத்தேயரும் மசெரேயரும் காரியாத்தியாரிமின் வழி வந்தோர்களாவர்; இவர்களிடமிருந்து சாரைத்தரும், எஸ்தாவோலித்தரும் தோன்றினர்.
54
பெத்லெகேம், நேத்தோபாத்தி, அதரோத்-பேத்-யோவாப் நகர மக்களும், மற்றும் மானக்தியரிலும் சோரியரிலும் பாதிப்பேரும் சல்மாவுடைய குலத்திலே உதித்தவர்கள்.
55
யாபேசில் குடியிருந்த மறைவல்லுநரின் குலவழியினர், கூடாரங்களில் தங்கியிருந்தனர். பாடியும் (இசைக் கருவிகள்) மீட்டியும் வந்தனர். இவர்களே ரெக்காபுடைய குலத்தந்தையான காலோர் வழிவந்த கினேயராவர்.