தாவீது அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட் படையினரையும் கைப்பற்றினார். தமக்கென்று நூறு தேர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றத் தேர்களின் குதிரைகளுக்கெல்லாம் கால் நரம்பை வெட்டிப் போட்டார்.
சீரியர்களையும் தமக்குப் பணியவைக்கும் எண்ணத்தோடு தமாஸ்குவிலும் படைகளை நிறுத்தினார். சீரியரும் தாவீதுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
அதரேசருக்குச் சொந்தமாயிருந்த தெபாத், கூன் என்ற நகர்களிலிருந்து ஏராளம் வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு தான் சாலமோன் வெண்கலக் கடல் தொட்டியையும், தூண்களையும், வெண்கலத் தட்டுமுட்டுகளையும் செய்வித்தார்.
அதரேசரோடு போராடி அவனை முறியடித்து வென்றதற்காகத் தன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தாவீது அரசருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, உடனே தன்மகன் அதோராமை அவரிடம் அனுப்பி வைத்தான். ஏனெனில் தோவு அதரேசருக்கு எதிரியாயிருந்தான். மேலும் பொன், வெள்ளி, வெண்கலத்தாலான எல்லாவிதத் தட்டுமுட்டுகளையும் அவருக்கு அனுப்பி வைத்தான்.
யோயியாதாவின் மகன் பனாயியாசு, கெரேத்தியர் படைக்கும் பெலேத்தியர் படைக்கும், தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வர் அரசர் முன்னிலையில் முதலிடங்களை வகித்து வந்தனர்.