நான் [*சாரோன் சமவெளி என்பது பாலஸ்தீனத்தின் கடலோர சமவெளியில் உள்ள ஒரு பகுதி.] சாரோனின் ரோஜாவும் [†ரோஜாவும் அல்லது குங்குமப்பூவின் குடும்பத்தைச் சேர்ந்தது.] , பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன். காதலன்
காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல், வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார். அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன், அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது.
அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. என் அன்பே, எழுந்து வா; என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார். காதலன்
பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே, உன் முகத்தை எனக்குக் காட்டு, உனது குரலை நான் கேட்கட்டும்; உன் குரல் இனிமையானது, உன் முகம் அழகானது.