English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 149 Verses

1 யெகோவாவைத் துதியுங்கள் [*துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது.] . யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.
3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.
4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
6 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.
7 அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,
8 அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,
9 அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. யெகோவாவைத் துதியுங்கள்.
×

Alert

×