English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Psalms Chapters

Psalms 110 Verses

1 யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
4 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” [*எபி. 5:6] என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.
×

Alert

×