Indian Language Bible Word Collections
Proverbs 2:20
Proverbs Chapters
Proverbs 2 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 2 Verses
1
|
என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி, |
2
|
நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை. |
3
|
உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி, |
4
|
சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால், |
5
|
அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய். |
6
|
ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன. |
7
|
அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து, |
8
|
அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார். |
9
|
அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய். |
10
|
ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். |
11
|
அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும். |
12
|
ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். |
13
|
அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, இருளான வழியில் நடக்கிறார்கள்; |
14
|
அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; |
15
|
அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, அவர்களுடைய வழிகளோ தவறானவை. |
16
|
ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும். |
17
|
தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள். |
18
|
அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது. |
19
|
அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை. |
20
|
இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக, நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக. |
21
|
ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள். |
22
|
ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள், துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள். |