English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Nehemiah Chapters

Nehemiah 12 Verses

1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
4 இத்தோ, கிநேதோன், அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.
8 யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
9 அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
10 யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,
11 யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
12 யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
13 எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
14 மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு,
15 ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
16 இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,
17 அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
18 பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான்,
19 யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
20 சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர்,
21 இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே.
22 பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள்.
23 எலியாசீப்பின் மகனான யோகனானின் காலம் வரையும் உள்ள லேவியர்களின் சந்ததிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24 அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள்.
25 மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் ஆகியோர் வாசல் காவலர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாசலிலுள்ள களஞ்சிய அறைகளைக் காவல் செய்தனர்.
26 இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள்.
27 எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.
28 எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும்,
29 பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள்.
30 லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள்.
31 பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன்.
32 ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள்.
33 அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள்.
35 அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன்.
36 சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான்.
37 அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள்.
38 இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய்,
39 எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம்.
40 நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம்.
41 அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள்.
43 இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது.
44 அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.
45 தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள்.
46 ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள்.
47 ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.
×

Alert

×